பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 பாவேந்தரின் பாட்டுத்திறன்

உதாரள் கொலைக்களத்திற்குக் கொண்டுவரப் பெறுகின்றான். “பேரன்பு கொண்டவரே, பெரியோரே என்று தொடங்கி உருக்கமான பேருரை - உணர்ச்சி வழியும் உரை (ஜூலியஸ் சீசர் என்ற செகப்பிரியரின் ஆங்கில நாடகத்தில் வரும் அந்தோனியின் உரை போன்றது முடிந்த பிறகு,

“ஆழ்க என்றன் குருதியெலாம் அன்புநாட்டில்

ஆழ்க என்றான் தலைகுனிந்தான் கத்தியின் கீழ்! இவற்றையெல்லாம் அமுதவல்லி கேட்டவண்ணம், பார்த்த வண்ணம் இருக்கின்றாள் கண்ணிர் உகுத்தவண்ணம், கவிஞர் கூறுவர்:

??

“படிகத்தைப் பாலாபிஷேகம் செய்து

பார்ப்பதுபோல் அமுதவல்லி கண்ணிர் வெள்ளம் அடிசோர்தல் கண்டார்கள் அங்கிருந்தோர்” என்று, அவள் உடல் படிகத்தால் செய்யப்பெற்றது போல் உள்ளது; அவள் உகுத்த கண்ணிர் உடலின்மீது வழியும்போது பாலால் முழுக்கிட்டது போல் இருக்கின்றது. இதனைக் கூடியிருந்தார் கண்டார்கள்’ என்கின்றார். அற்புதமான உவமை.

சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் குப்பனும் வள்ளியும் சந்திக்கின்றனர். முத்தங்கள்பற்றிய காதல் உரையாடல் நடை பெறுகின்றது. முத்தத்தை எதிர்பார்த்துத் தவிக்கும் குப்பன் அவளை அதுமன் சஞ்சீவி பர்வதத்தைத் தூக்கியது போல் பறந்தான் பருவதமேல் பாங்கியைத் தூக்கியே. இதனைக் கவிஞர் கூறுவார்:

கிட்டரிய காதற் கிழத்தி இடும்வேலை விட்டெறிந்த கல்லைப்போல் மேலேறிப்பாயாதோ! கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்” என்று. காதலி காட்டும் கண்ணின் கடைப்பார்வையில் மயங்கும் காதலனுக்கு மாமலையும் ஒர் கடுகாம் என்கின்றார். குப்பன் வள்ளியைத் தூக்கிக் கொண்டு விட்டெறிந்த கல்லைப்போல்

6. புரட்சிக்கவி. 35 7. புரட்சிக்கவி- 35 8. சஞ்சீவி பர்வதத்தின் சாரல்-பக்கம் 4