பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 பாவேந்தரின் பாட்டுத்திறன்

காதலர்கள் மலையிலிருந்து மலைச்சாரலுக்கு வர நினைக்கின்றனர். காதலியின் நிலையையும் அவள் காதலனிடம் கூறுவதையும் காட்டுகின்றார்:

தென்றலிலே மெல்லச் சிலிர்க்கும் மலர்போல கன்னி யுடல்சிலிர்க்கக் “காதலரே, நாம் விரைவாய்க் சாரல் அடைவோமே, காதலுக்குத் தக்கஇடம் சாரலும் தன்மாலை நாயகியைச் சாரக் குயில்கூவிக் கொண்டிருக்கும்.” மென்மையான மலரை மெல்லியலாருக்கு உவமையாக்குவது கவி மாபு, தென்றல் வீசும்போது சில மலர்கள் மெல்லச் சிலிர்த்து மலரும். (எ டு, முல்லை. மல்லிகை (மாலை நேரத்தில்), இங்குக் காதலர்களும் திரும்பும் நோம் மாலை நேரம். இப்பொழுது வள்ளியின் மேனி சிவிர்ப்பதாகக் காட்டுகின்றார். நேர்த்தியான உவமை இது.

வீரப்பன் என்னும் (பாண்டியன் பரிசு) திருடர் தலைவன் தன் வரலாற்றைக் கூறும் பாங்கில்.

ஒருபிள்ளை கொடிவேங்கை போல்வான், கண்போல் ஒருமனைவி இருவரையும் பிரிந்தேன்” என்று தெரிவிப்பான். வீரப்பன் மகன் வேலன். இவனே கதைத் தலைவன். அவன் துணிவிலும், வீரத்திலும் வேங்கையை ஒப்பான் என்பதைக் காவியத்தைப் படித்தோர் நன்கு அறிவர். மனைவி ஆத்தா. கணவனுக்குக் கண் போன்றவளாக இருந்தாள். பறவை சிறகுகளால் குஞ்சுகளைக் காப்பதுபோல் கதிர்நாட்டரசன் மகள் அன்னத்தைக் காத்தவள். இவள் வரலாற்றை நோக்கும்போது இவள் கணவனுக்கு மட்டிலும் கண் போன்றவள் அல்லள், நாட்டிற்கே கண் போன்றவள் என்ற குறிப்பையும் நன்கு உணர்தல் இயலும்,

ஆத்தாக் கிழவியைக் காப்பாற்றுமாறு வேலனைப் பணிக்கின்றான் கணக்காயன். அவனும் புல்லுரே அதிரச் செல்லுகின்றான். அவனுக்குத் துணையாகச் செல்ல விழையும் ஒரு சேய் சொல்வான்:

10. சஞ்சீவி பர்வதத்தின் சாரல் பக்கம் 16 11. பாண்டியன் பரிக இயல் 16. பக்கம் 28