பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமைத்திறன் 125 எத்தனை செம்மை! பசுமையும் கருமையும், எத்தனை! கரிய பெரும்பெரும் பூதம்! நீலப் பொய்கையின் மிதந்திடும் தங்கத் தோணிகள் சுடரொளிப் பொற்கரை யிட்ட கருஞ்சிக ரங்கள்:- காணடி, ஆங்கு தங்கத் திமிங்கிலம் தாம்பல மிதக்கும் இருட்கடல்!- ஆகா! எங்கு நோக்கிடினும் ஒளித்திரள்! ஒளித்திரள்! வண்ணக் களஞ்சியம்!” இப்பாடற் பகுதியில் “தீயின் குழம்புகள்”, “செழும் பொன் காய்ச்சிவிட்ட ஓடைகள்”, “தங்கத் தீவுகள்”, “நீலப் பொய்கைகள்” “இருட்கடல்'- இவை யாவும் உருவகங்கள்.

தன் குருநாதரின் அடியை ஒட்டிச் செல்வதுபோல் “பாண்டியன் பரிசில் ஒரு பகுதி. அன்னமும் நீலியும் ஒடம் ஏறி உலவச் செல்லுகின்றனர். இப்பகுதியில் ஒரு பாடல்:

தேங்கிநிற்கும் புனல்மீது செல்லா நிற்கும்

செம்படகில் ஒருபுறத்தில் சிரித்த வண்ணம் பாங்கிநிற்கப் பார்த்துதின்ற அன்னம் சொல்வாள்!

“பாரடி நீ மேற்றிசை வானத்தை! அங்கும் தேங்கி நிற்கும் பொன்னாற்றில் செழுமாணிக்கச் செம்பரிதிப் படகோடும்! கீழ்த்தி சைவான் வாங்கிதிற்கும் ஒளியைப்பார் காட்சித் தேனில்

வண்டடிநாம் என்றுரைத்து மகிழ்ந்து நின்றாள். இங்கு “தேங்கி நிற்கும் பொன்னாறு’, ‘செழுமாணிக்கச் செம்பரிதிப் படகு”, “காட்சித்தேன்” என்பவை உருவகங்கள். பாவேந்தரின் பாடல்களில் “பலாச்சுளைகள்” போன்ற உவமைகளைச் சுவைத்து இன்புறுவதே ஒரு சிறந்த அநுபவம்.

உவமையே அணிகளின் தாய்: உவமை உருவகம் போன்ற அணிகளைப் போலவே பல்வேறு அணிகள் தோன்றியுள்ளன. தமிழிலுள்ள தண்டியலங்காரம் முப்பத்தாறு அணிகளையும்

20. பாஞ்சாலி சபதம்- 152 21. பாண்டியன் பரிசு - இயல் 52- பக்கம் 90