பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருணனைத்திறன் . 129 (அ) சென்றுகொண்டே வருணிப்பவை

1. குன்றுார்ப் பாட்டு” ஒரு சமயம் கவிஞர் கோவை நகரின் திராவிடக் கழகச் செயலாளர் அரங்கநாதனின் அருமைத் தம்பியின் திருமணத்திற்குச் சென்றிருந்தபோது குன்றுார்த் தமிழரும் ஒரு சொற்பொழிவுக்கு அழைத்ததால் குன்றுார் செல்ல நேர்ந்தது. அப்பயணத்தைப்பற்றி இப்பாடவில் தருகின்றார். அதில் சில வருணனைப் பகுதிகள்:

குன்றின் மீதில் அமைந்தது குன்றுார்!

                  • கோவைக்கு - ஐம்பது கல்லுக்கு அப்பால் அமைந்தது! வருவார்க் கெல்லாம் இயற்கை தந்த அழகின் படைப்பு:

கோவையி னின்று குன்னூர் போக ஆவ லோடுநான் இயங்கியில் அமர்ந்தேன். நடுப்பகல் நோக்கிக் காலை நகர்கையில் பொன்வெயில் பொன்வண்டாக வண்டி பறந்து சென்று, வாணிகம் பரந்த மேட்டுப் பாளைய நகரின் மேன்மையைக் காட்டி, வெப்பமும் காட்டி நின்றது:

மேட்டுப் பாளையக் கடைத்தெரு விட்டு மேலும் விரைந்து செல்லும்என் வண்டி, இருபுறம் பாக்கு மரங்கள் அடர்ந்த ஒருவழி ஓடிற்று, மரங்களும் உடன்வர’ அத்தனை நீளப் பெருவழி அதுதான்! இரண்டுகல் தொலைவு இரண்டடிக் கொன்றென கால்கீழ் ஊன்றிக் கண்கொள்ளா உயரத்து உச்சியில் பச்சை மட்டைகள் சுமந்து

4. குயில் பாடல்கள் - பக்கம் 20 5. மரங்கள் உடன் வருவதில்லை.நாம் மரங்களைப் பார்க்கின்றோம். அவை நம்மை

விட்டு எதிர்த்திசையில் செல்வது போன்ற ஒரு மயக்கநிலை.