பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருணனைத்திறன் ; 141 பொன்னாப்ப் பொலியும் தளிரும், புதுமெருகில் மின்னாப் மிளிர்கின்ற மென்தளிரும், பிள்ளைகளின் மேனி எனப்பொலியும், மிக்கொளிசெய் நற்றளிரும், ஆன கிளிச்சிறகின் ஆர்ந்த பகந் தளிரும், கொத்தாய் இருக்கும், குயிலலகுச் சாமனத்தை வைத்தெடுத் துண்ணும்; பின்தத்திப் பிறிதொருபால் வேறு தளிர்பார்க்கும்; இடைஇடையே, மேல் கரும்பின் சாறுநிகர் பாடல் தரும், தன் சிறகடித்து மற்று மொருகிளைக்கு மாறும், மறுநொடியில் முற்றிலும் அஞ்சும், மகிழும் முடிவினிலே. சேய்மையிலோர் சோலைக்குச் செல்லும் குயிலினிடம் தூய்மைமிகு பண்பொன்று கேட்பீர், சுவையைப் படியளக்கும் வையத்தார் உண்ணும் படியே குடியிருப்பொன் றில்லாக் குயில்’ பாடலைப் படித்து அநுபவிக்கும்போது நமது மனத்திரையில் குயிலின் செயல்களனைத்தும் பதிவாகி விடுகின்றன, ஒலிப்பேழை நாடாவில் நிகழ்ச்சிகள் பதிவாவதைப் போல!

மயில்: கவிஞர் மயிலை அற்புதமாகக் காட்டுவதுடன் ஒரு கருத்தான செய்தியையும் தருகின்றார்.

அழகிய மயிலே! அழகிய மயிலே! அஞ்சுகம் கொஞ்ச அமுத கீதம் கருங்குயி லிருந்து விருந்து செய்யக், கடிமலர் வண்டுகள் நெடிது பாடத், தென்றல் உலவச், சிலிர்க்கும் சோலையில் அடியெடுத்துன்றி அங்கம் புளகித்(து) ஆடு கின்றாய் அழகிய மயிலே!

* * | உனது தோகை புணையாச் சித்திரம் ஒளிசேர் நவமணிக் களஞ்சியம் அதுவும்!

tik *

16. குயில் பாடல்கள் - பக்கம் 5-6