பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருணனைத் திறன் Y 143

மயிலின் தோகையை “நவமணிக் களஞ்சியம்” என்று வருணிப்பதும், உள்ளக்களிப்புதான் கொண்டையின் உச்சியாய் உயர்ந்தது என்று கூறுவதும் படிப்போருக்கு உவகை விளைவிக்கும் பயனாகும். பெண்கள் கழுத்து குறுகியிருப்பதற்கும். மயிலின் கழுத்து திண்டிருப்பதற்கும் கவிஞர் கூறும் காரணம் கற்போருக்குக் களிப்பினை நல்குகின்றது.

கதிரவன் மறைவு: இதனைப் பல இடங்களில் வருணிப்பர் கவிஞர்.

தீயைச் சொரிந்த செழுமைச் சூரியன் மேற்றிசை யேகி வீழு முன்பு கண்ணுக் கழகிய காட்சி தந்து தீமை சிறிதும் இன்றித் திகழ்ந்தது


உயர்ந்த வானிடை உற்ற மேற்கில் ஒளிப்பிரவாகம்! ஒருநூறு நிறங்கள்: தகத்த காயம் சார்ந்தஅந் நிறங்களில் ஒன்றில் ஒன்று சங்கமம்: ஆங்கே ஊதா வண்ணத் தடாகம், பொன்னின் உருக்கு வெள்ளத்தில் ஒடிக் கலந்ததே! இது பாரதியின் “பாஞ்சாலி சபதத்தில் காட்டப்பெறும் கதிரவன் மறைவை நினைவுகூரச் செய்கின்றது.

வானவில்: இதனைப் புராணிகர் “இந்திர தனுசு” என்று சொல்லி மகிழ்வர். நம் கவிஞர் அதனை “விண் எழுது கவிதை” என்று சொல்லிக் களிப்பர்.

மண்ணுலகு கடல்மலை அனைத்தும் உள்ளாக்கியே வளைந்தது வானவில் என்னென்ன வண்ணங்கள்:

புதுமை.இது வானிடைக் கண்டஅல் வோவியம் போப்,முகிற் புனலிலே நொடிதோறும் கரைந்ததே! அது.இது எனச்சொல்ல ஏலாது ஒழிந்ததே! இன்பமும் துன்பமும் யாவுமே இவ்வண்ணம்