பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 பாவேந்தரின் பாட்டுத்திறன்

கதுமெனத் தோன்றிடும், மறைந்திடும் என்பதைக் கண்னெதிர்க் காட்டவரும் விண்எழுது கவிதையாம்; அதுதமக்குத் தெரியும், அன்றியும் கவிஞரும் அவ்வாள் விரிவினும் பெரிதென்ப தறிவமே’ வானவில் தோன்றி மறைவது இன்பமும் துன்பமும் மாறிமாறி வரும் என்ற உண்மையைக் கவிஞர் நம்மை நினைவு கூரச்செய்வது நெஞ்சை மிகவும் நெகிழ வைக்கின்றது.

அந்திப் போது அந்திப் போது பற்றி ஐந்து அழகான பாடல்கள். இவை போன்றவை பாரதியின் பாஞ்சாலியின் சபதத்திலும்: காணலாம். கவிஞர் இங்கு அந்தியையும் நிலவினையும் கடலின் சக்களத்தி (சககிழத்திப் போராட்டமாகக் காட்டுகின்றார். அத்தியும் மேற்கில் மறைத்தான் - அவள்

ஆடை யெனும்கரு வானம், எத்தத் திசையிலும் காற்றில் - பறந் தேறிடும் காட்சியும் கண்டீர்! சித்திய முத்து வடத்தான் - ஒளி சேர்த்திடும் நட்சத்திரங்கள்! சித்தையிற் கோபம் அடைந்தாள் - அந்தி

சின்முகம் இங்குத் திருப்பாள். இங்கு இயல்பான அந்தியின் சிவந்த நிறம் அவள் சினங்கொண்டதாகக் கற்பனை செய்யப்பெற்றது.

பாடும் கடற்பெரு வேந்தன் . தன் பங்கில் இருந்தன னேனும் நாடும் உளத்தினில் வேறு - தனி

தங்கையை எண்ணிட லானான் ஏடு திருப்பிப் படித்தால் - அந்தி

எப்படி ஒப்புவாள் கண்டீர்! ஆடி நடந்துவத் திட்டாள் - அதோ

அத்தியின் நேர்சக்க ளத்தி!

18. குயில் பாடல்கள் - பக்கம் 13 19. பாஞ்சாலி சபதம் பாடல் 152