பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருணனைத்திறன் Y 145 கடலரசனின் ஒரு மனைவி ‘அந்தி’ என்றும், மற்றொருததி (சக்களத்தி - சககிழத்தி) நிலவு என்றும் கற்பனை செய்கின்றார் கவிஞர். பண்டையோர் நிலவினைக் “கணவன்” என்றும் நட்சத்திரங்களை மனைவிமார் என்றும் கொண்டனர்.

கன்னங் கறுத்தநற் கூந்தல் - அந்தி

கட்டவி ழநடத் தாளே சென்னி புனைந்த கிரீடம் - மணி

சிந்திட ஒடி விட்டாளே! கன்னி யுளம்வெறுத் தாளே - கடற் காதலன் போக்கினை எண்ணி! என்ன உரைப்பினும் கேளாள் - அந்தி

யின்முகம் கீழ்த்திசை காட்டாள். முகத்தைத் திருப்பிக்கொண்டு மேற்றிசை நோக்கிப் பறந்து விடுகின்றாள் கவிஞரின் கற்பனையில். இஃது ஒர் ஊடற் காட்சி!

ஏடி ஒளிமுகத் தாளே - அந்தி:

என்னை மணந்தனை என்றே கோடி முறை அழைத் திட்டான் - உளம்

கொந்தளிப் புற்றுப் புரண்டான் வாடிய அந்தி நடந்த அந்த

மார்க்கத்தி லேவழிப் போக்கிப் பீடழிந் தான்.அந்த நேரம் - ஒரு

பெண்வந்து பின்புறம் நின்றாள். நிலவு தோன்றுவதும் அப்போது கடல் கொந்தளிப்பதும் இயற்கை நிகழ்ச்சிகள். கடல் கொந்தளிப்பதைக் கடல் வருத்தத்தினால் புரண்டழுவதாகக் கற்பனை செய்கின்றார். வந்திடு சோதி நிலாவைக் - கடல் வாரி அணைந்தனன் கண்டீர்! அந்தி பிரிந்ததி னாலே - கடல்

ஆகம் இருண்டது; பின்னை விந்தை நிலாவரப் பெற்றான்-கடல்

மேனியெல் லாம்ஒளி பெற்றான்! சிந்தையை அள்ளுது கண்டீர்!-அங்குச்

சீதக் கடல்மதிச் சேர்க்கை!” 20. குயில் பாடல்கள் - பக்கம் 66-67