பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 பாவேந்தரின் பாட்டுத்திறன்

இரவு வரும் காட்சி இனிதாகக் காட்டப்பெறும் பாடற்பகுதி இது.

மேற்றிசைக் கதிர்ப்பழத்தை

விருத்துண்டு நீல ஆடை. மாற்றுடையாய் டுத்து

மரகத அணிகள் பூண்டு கோற்கிளை ஒடுங்கும் புட்கள் கோட்டிடும் இறகின் சந்தக் காற்சிலம் பசையக் காதல்

கரும்பான இரவு தன்னைக் திருவிளக்கேற்றி வந்து

தெருவினில் வரவேற் கின்றாள்.” இதில் கதிர்ப்பழம், கரும்பான இரவு, திருவிளக்கு - இவற்றில் கட்புலப் படிமங்களைக் கண்டு வியக்கலாம். கதிர்ப்பழம், கரும்பான இரவு இவற்றில் சுவைப்புலப் படிமங்கள் பளிச்சிடுவதையும் கண்டு களிக்கலாம்.

அரும்பெருந்தவத்தால் பெற்ற சின்னஞ் சிறு கிளியை - பெண் குழவியை வேடப்பன் காண்கின்றான்.

இளகிய பொன்உருக்கின்

சிற்றுடல், இருநீலக்கண் ஒளிபடும் பவளச் செவ்வாய்

ஒருபிடிக் கரும்பின் கைகால் அளிதமிழ் உயிர்பெற்றங்கே

அழகொடும் அசையும் பச்சைக் கிளியினைக் கானப் பெற்றான்” “பேகம் பொற்சித்திரமாக வளரப் போகும் பச்சைக்கிளியின் மேனி அழகினைக் காட்டும் பாங்கில் கட்புலப் படிமத்தில் ஈடுபடுகின்றோம்.

எள்ளிளஞ் சிறிய பூவை

எடுத்துவைத் திட்ட மூக்கும்

9. குடும்ப விளக்கு- ஒருநாள் நிகழ்ச்சி பக்கம் 26-27 10. குடும்ப விளக்கு- ஒருநாள் நிகழ்ச்சி பக்கம் 150