பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் நோக்கில் இயற்கை Y 199 ஆற்றின் நீர் தேங்கும் ஏரி, குளம், குட்டை போன்றவற்றையும் அவை வளர்க்கும் தோட்டம், சோலை, தோப்பு முதலியவற்றையும் இளைஞர்களின் உள்ளம் கவரும் வண்ணம் சொல்லோவியங்களாகக் காட்டுவார்’

(4) காடு: முல்லையின் முதற் பொருள் காடும் காடு சார்ந்த இடமும் ஆகும். நாட்டை அடுத்திருப்பது காடு. காடு மிகுந்தால் மழைவளத்திற்குக் குறைவில்லை. அங்கு இயற்கையே அரசாளுகின்றது.

நாடினேன்; நடந்தேன் என்றன் நகரஒ வியத்தைத் தாண்டித் தேடினேன்; சிற்றுார் தந்த

காட்சியைச் சிதைத்தேன்; சென்றேன்; பாடினேன் பறந்தேன், தேய்ந்த

பாதையை இழந்தேன். அங்கே மாடிவி டொன்று மில்லை

மரங்களோ பேச வில்லை’ இயற்கை அழகில் சொக்கி அநுபவித்துக்கொண்டே சென்றபொழுது,

வன்மைகொள் பருக்கைக் கல்லின் வழியெலாம் பள்ளம், மேடு! முன்னாக இறங்கி ஏறி

முதலைகள் கிடப்பதைப்போல் சின்னதும் பெரிதுமான

வெடிப்புகள் தாண்டிச்சி செல்ல வேண்டியதாயிற்று என்கின்றார் கவிஞர். வழியில் மயிலொன்று அகவி, தோகையை விரித்து வரவேற்பு நல்குகின்றது. காரெலி ஒன்று வாலை ஆட்டிக்கொண்டே நல்வழி காட்டிச் செல்லுகின்றது. முகத்தில் கொடுவாள் மீசையையுடைய வேடன்

51. இளைஞர் இலக்கியம்- பக்கம் 15-25 52. அழகின் சிரிப்பு- பக்கம் 10 53. அழகின் சிரிப்பு- பக்கம் 11