பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 பாவேந்தரின் பாட்டுத்திறன்

ஒருவன் கவிஞரின் எதிரே வருகின்றான். வேட்டையிற் சிக்கிய பறவைகளைக் காட்டுகின்றான். அவற்றின் பெயர்களை கேட்க, வேடன் “பாத்துவாசன்” என்ற பறவையை வலியன்” என்றும், “சகோரம்” என்பதைச் செம்போத்து” என்றும் தூய தமிழில் விளக்கினாள். தமிழா, நீ வாழ்க’ என்று வேடனைப் பாராட்டுகின்றார்.

காட்டிலுள்ள மரங்கள் காட்டின் பெருங் கூரைபோல் உள்ளன

என்று கூறும் போக்கில் செருந்தி, ஆச்சா, இலந்தை, தேக்கு ஈந்து, கொன்றை என்ற மரங்களை இனங்காட்டுவார். கூரையின்மீது நீண்டுயர்ந்த மரத்தின்மீது இரு குரங்குகள் பொன்னுரசல் ஆடுவதையும் காட்டுகின்றார்.

குருந்தடையாளம் கண்டேன்

கோணல்மா மரமும் கண்டேன்!” என்று கூறுவார். பல பிராணிகளையும் காட்டுவார். ஆனை ஒன்று இளமரத்தை முறித்து நிற்கின்றது. ஆந்தையின் கூட்டைப் பூனை ஒன்று அணுகுகின்றது. அங்கே ஒரு புலியும் தோன்றுகின்றது. பாம்பொன்று பானை வாய்திறந்த நிலையில் இருக்கக் கண்டு அனைத்துப் பிராணிகளும் பறந்தோடுகின்றன. மான்கன்று ஒன்று தாயைக் காணாது நிற்க, அதன்மீது நரியொன்று பாய்ந்து மாய்த்து விடுகின்றது. இங்ஙனம் பல காட்சிகளை காட்டுவார் கவிஞர்.

{5 ஆல் விண்ணை முட்டும்வரை ஓங்கி வளர்ந்து மண்ணில்

விழுது பரப்பித் தழைத்து வளர்ந்திருக்கும் ஆலமரத்தைக் காட்டுவார் கவிஞர்.

தெள்ளிய ஆலின் சிறுபழத் தொருவிதை

தெண்ணிர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்

துண்ணிதே ஆயினும், அண்ணல் யானை

அணிதேர் புரவி ஆட்பெரும் படையொடு

மன்னர்க் கிருக்க நிழல்ஆகும்மே”

54. அழகின் சிரிப்பு பக்கம் 12 55. வெற்றி வேற்கை - பக்கம் 17