பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் நோக்கில் இயற்கை 203 தாமரை இலைமேல் முத்துகள் போன்ற நீர்த்திவலைகள்

காணப்படுகின்றனவாம். இதில் உள்ள உவமை உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகின்றது.

இருள் மிகுந்த இல்லத்தில் எழில்மிகு நாரியர் தம் செங்கைகளில் மணி விளக்கேந்தி அணி செய்தல் போலத் தாமரை இலைப்பரப்பில் செவ்வரும்புகள் முகிழ்த்துக் கவிஞரின் விழிகளுக்குப் பெருவிருந்து படைத்தன என்று விளக்கும் பாடல் இது.

மணிஇரும் அடர்ந்த வீட்டில்

மங்கைமார் செங்கை ஏந்தி அணிசெய்த நல்வி ளக்கின்

அழகிய பிழம்பு போலத் தனிஇலைப் பரப்பி னிற்செந்

தாமரைச் செல்வ ரும்பு பனிபோக்கி என்விழிக்குப்

படைத்தது பெருவி ருந்தே” இதில் அமைந்துள்ள உவமையும் கவிஞரின் நுண்ணுணர்வைக் காட்டுகின்றது.

மலர்களின் தோற்றத்தை மதி நுட்பத்தால் விளங்கும் பாங்கினைக் காட்டும் பாடல் இது.

விண்போன்ற வெள்ளக் காடு,

மேலெல்லாம் ஒளிசெய்கின்ற வெண்முத்தங்கள்கொழிக்கும் பச்சிலைக் காடு, மேலே மண்ணுளார் மகிழும் செந்தா

மரைமலர்க் காடு, நெஞ்சைக் கண்ணுளே வைக்கச் சொல்லிக்

கவிதையைக் காணச் சொல்லும்” முத்தாய்ப்பான இப்பாட்டில் மலர்களின் மகிழ்ச்சிப் பொலிவு மாண்புறக் காட்டப் பெறுகின்றது.

60. அழகின் சிரிப்பு- பக்கம் 23 61. அழகின் சிரிப்பு- பக்கம் 23