பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுவைத்திறன் 215 பெண்ணாளை வஞ்சிக்க எண்ணி வந்து

பிழைசுமந்தான் வாரானோ” என்று கூறிக் கடிவாளம் ஒருகையில் பகைவர் பெற்ற

புண்ணினிலே குதித்தெழுந்த வாளோர் கையில் புதுமைசெய ஒருகுதிரைமீதி லேறி

பகைப்படையின் உட்புகுந்து தேடிக் கண்ணிற்

பட்டவரின் உடல் சாய்த்தே, புறங்கள் எட்டும் நகைப்பாலே நெருப்பாக்கிப் புருவம் ஏற்றி

நாற்புறத்து வாயிலையும் சுற்றி வந்தாள்’ இப்பாடல்களைப் படிக்கும்போது வெகுளிச்சுவை வெளிப்படு கின்றதைக் கண்டு அநுபவிக்கின்றோம். இஃது உறுப்பறையை நிலைக்களனாகக் கொண்டெழுந்தது.

(2) உவகைச் சுவை: உவகை செல்வம், புலன், புணர்வு, விளையாட்டு என்ற நான்கை நிலைக்களனாகக் கொண்டு பிறக்கும். தோழியிடம் தான் தலைவனைக் கண்டு அவனுடன் புணர்ந்து பெற்ற மகிழ்ச்சியைக் கூறுகின்றாள் தலைவி.

பட்டிமகன் போனவாரம் கடற்கரை ஓரம் - எனைக் கிட்டிவந்தான் கெஞ்சிநின்றான் ஒருமணி நேரம்.

கட்டழித்தான் தொட்டிழுத்தான் கட்டி அணைத்தான் - இளங் காளையவன் என்உதட்டுப் பாளையை அவிழ்த்தான்.

முன்னிருப்பார் பின்னிருப்பார் என்னை நினைப்பார்! - வாய் முல்லைக்காட்டின் அண்டையிலே

முத்தம் விளைத்தான்

5. பாண்டியன் பரிசு - இயல்- 6 பக்கம் 10