பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 பாவேந்தரின் பாட்டுத்திறன்

முன்னிலவும் எழுந்ததுவே முடிமுடி என்றேன் - என் முகநிலவின் குளிரிலேதன் முகத்தை நனைத்தான்” இப்பாடல்களைப் படிக்கும்போது உவகைச் சுவையை அநுபவிக்கின்றோம்.

(3) நகைச்சுவை: நகை என்பது சிரிப்பு. நகை தோன்றும் இடங்கள் பலவாகும். அது எள்ளல், இளமை, பேதைமை, மடன் என்று நான்கு நிலைக்களன்கள் வழியாகப் பிறக்கும். ஒரு சமயம் நீலியும் அன்னமும் பேசியிருக்கையில் (பாண்டியன் பரிசு) நரிக்கண்ணன் மகன் பொன்னன் வருகிறான். தன் காதலை வெளியிடும் வகையில் அன்னத்திடம் உளறிக் கொட்டுகின்றான்.

மணந்துகொண்டால் என்னிடமே இருக்க வேண்டும்

மரியாதை யாய்நடந்து கொள்ள வேண்டும் பிணம்போல எப்போதும் தூங்க வேண்டா! பிச்சைக்காரர்வந்தால் அரிசி போடு: பணம்போடு, குறைந்துவிடப் போவதில்லை! பாலினிக்கும்! நம்வீட்டில் மோர்பு வளிக்கும்! துணிந்துநிற்பாய் என்னோடு திருடர் வந்தால்

சுருக்கமென்ன முகத்தினிலே? அதெல்லாம் வேண்டா இவ்வகையாய்ப் பொன்னப்பன் அடுக்குகின்றான்

இளவஞ்சி நீலிமுகம் பார்த்துப் பார்த்தே செவ்விதழின் கதவுடைத்து வரும்சி ரிப்பைத்

திருப்பிஅழைத்துள்ளடக்கிக் கொண்டிருந்தாள்’ பொன்னப்பன் ஒர் அடி முட்டாள் ! அன்னத்தின்மீது காதல் கொள்ளுகின்றான். அவளோ இவனைச் சீந்தவில்லை. அவனுடைய பேதைமையுடைய பேச்சு நகைச்சுவையை விளைவிக்கின்றது.

6. காதல் பாடல்கள் பக்கம் 58 7. பாண்டியன் பரிசு, இயல் 46, பக்கம் 77, 78