பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவைத்திறன் Y 217

(4) அழுகைச் சுவை: அழுகை என்பது அவலம், இரக்கம். அது இளிவு, இழிவு, அசைவு, வறுமை என்ற நிலைக்கலன்கள் வழியாகப் பிறக்கும். இழிவு என்பது, தந்தையும் தாயும் முதலான சுற்றத்தாரையும், இன்பம் பயக்கும் நுகர்ச்சி முதலானவற்றையும் இழத்தல் (பேரா), உயிரானும் பொருளானும் இழத்தல் (இளம்), பெற்றோர் இருவரையும் இழந்த அன்னம் (பாண்டியன் பரிசு) துயரம் தாங்காமல் அழுகின்றாள். அந்த அழுகையைக் காட்டும் பாடல்கள்:

ஒப்புரைக்க முடியாத அன்னை என்னை

ஒருக்கணித்து மார்பனைத்து மேனி எல்லாம் கைப்புறத்தில் ஆம்படிக்குத் தழுவி என்றன்

கண்மறைக்கும் சுரிகுழலை மேலொ துக்கி மைப்புருவ விழிமீது விழிய மைத்து

மலர்வாயால் குளிர்தமிழால் கண்ணே யென்று செப்பிமுத்தம் இட்டாளே! அன்புள்ளாளின்

செந்தா மரைமுகத்தை மறப்பேனோநான்? இது தாயை நினைத்து அழுவது.

இம்மாதி லம்புகழும் தந்தை, முந்தை

ஈட்டிவைத்த மாணிக்கம் கூட்டிஅள்ளிக் கைம்மாரி யாய்ப்பொழிந்து கணக்கா யர்பால் கலையருள வேண்டித்தன் தலைவணங்கி அம்மாள னக்கூவிக் கைம்மே லேந்தி

அருகமர்ந்து பருகஎன்று பாலும் தந்தே “அ”ம்முதல் எழுத்தளித்தான் அறிவோ அன்னோன்

அன்பான திருமுகத்தை எண்ணி வாடும்!” இது தந்தைைைய நினைந்து அழுவது.

இரண்டு பாடல்களைப் படிக்கும்பொழுது அவலச் சுவையின் கொடுமுடியை எட்டி விடுகின்றோம்.

(5) பெருமிதச் சுவை பெருமிதம் என்பது வீரம். அஃது ஏனைய பெருமைகளோடு ஒப்பநில்லாது பேரெல்லையாக நிற்பதால் பெருமிதம் எனப்பட்டது என்பர் பேராசிரியர். எனவே, அறிவ, ஆண்மை, பொருள்,

8. பாண்டியன் பரிசு-இயல் -22-பக்கம் 43.