பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுவைத்திறன் 221 பாங்கிநிற்கப் பார்த்துநின்ற அன்னம் சொல்வாள்!

பாரடிநீ மேற்றிசைவானத்தை ஆங்கும் தேங்கி நிற்கும் பொன்னாற்றில் செழுமாணிக்கச் செம்பரிதிப் படகோடும்! கீழ்த்தி சைவான் வாங்கிநிற்கும் ஒளியைப்பார்! காட்சித் தேனில்

வண்டடிநாம்! என்றுரைத்து மகிழ்ந்து நின்றான்” பாடலைப் படிக்கும்போது பாடலின் பிற்பகுதி நம்மிடையே மருட்கைச் சுவை எழுவதைக் கண்டு மகிழலாம்.

“ஆங்கவை ஒரு பாலாக” (மெய்ப்ப - 2) என்ற நூற்பாவில் தொல்காப்பியர் குறிப்பிடும் மேலும் சில மெய்ப்பாடுகளையும் பாவேந்தர் பாடல்களில் பயின்று வருவதைக் காணலாம். அகத்திணைக்குரிய சில மெய்ப்பாடுகளையும் கண்டு மகிழலாம். விரிவஞ்சி அவை ஈண்டுக் காட்டப் பெறவில்லை.

12. பாண்டியன் பரிசு - இயல்-52 - பக்கம் 90