பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 பாவேந்தரின் பாட்டுத்திறன்

(7) இளிவரல் சுவை இனிவரல் என்பது இழிபு; அதாவது மானக் குறைவு. இந்தச் சுவை மூப்பு, பிணி, வருத்தம், மென்மை என்பவற்றின் நிலைக்களன்களாகப் பிறக்கும். அன்னம் கொல்லப்பட்டு இடுகாட்டில் புதைக்கப் பெற்றாள் (பாண்டியன் பரிசு என்னும் தவறான செய்தி காட்டுத்திப்போல் பரவுகின்றது; வேலன் காதுக்கும் இஃது எட்டுகின்றது.

ஏதோ ஒரு பிணத்தைத் தோண்டியெடுத்து மடிமீது வைக்கின்றான். மங்கிய நிலவொளியில் அடையாளம் சரியாகத் தெரியவில்லை. முத்தம் கொடுக்கக் குனியும்போது முகிற் கூட்டத்தைக் கிழித்துக்கொண்டு முழுமதியம் தோன்றுகின்றது. பிணத்தின் அருவருக்கும் நிலையைக் காண்கின்றான். அதனை விட்டெறிந்து இழிப்புரை பல பகருகின்றான்.

“சீ.என்று பினம்எறிந்து விரைந்தெ ழுந்து

சிதையுடலை மறுமுறையும் உற்று நோக்கி ஏ! இதற்குத் தானாஇவ் வழியு டற்கா?

இருள்கண்டால் விழிமூடும் நோயும் அஞ்சும் வாயெச்சில் கண்டாலும் அருவ ருக்கும்

மாக்கீழ்மை! இதற்குத் தானாஇப் பாடு! ஈயருந்த அழுகுதசை எறும்பு மொய்க்க

இற்றொழுகு புண்ணிர்! மற்றிதிலோ நாட்டம்?” இப்படிப் பல பாடல்கள். பாடல்களைப் படிக்கும்போது இளிவரல் சுவையை அநுபவிக்க முடிகின்றது.

(8) மருட்கைச் சுவை: மருட்கை என்பது வியப்பு. இச்சுவை புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம் இவற்றின் நிலைக்களனாகப் பிறக்கும். நீர்தேங்கும் செய்யாற்றில் அன்னமும் நீலியும் ஒடம் விடுகின்றனர்.

நீர்தேங்கும் வெள்ளன்னம் அசைந்தி டாது

செல்லல்போல் தெண்ணீரில் சென்றது ஓடம் தேங்கிநிற்கும் புனல்மீது செல்லா நிற்கும்

செம்படகில் ஒருபுறத்தில் சிரித்த வண்ணம் 11. பாண்டியன் பரிசு - இயல்- 87 - பக்கம் 165