பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 பாவேந்தரின் பாட்டுத்திறன்

ஆயஅக் கள்ளிக் காட்டு வழிச் செல்பவர் மீட்டும் அணுகாரோ அணுகாவிடில் அதுவென் நெஞ்சை

வாட்டும் நி) சங்கப பாடலின் கருத்து உரையின்றி எவரும் எளிதாக ஏற்று அறியும் வண்ணம் அமைந்துள்ளது இப்பாடல்.

பிறிதொரு பாட்டு: இது செம்புலப் பெயனிரார் பாடிய குறுந்தொகைப் (40) பாடலாகும். தலைவன் கூற்றாக அமைந்தது.

யாயும் யாயும் யாரா கியரோ எந்தையு துந்தையும் எம்முறைக் கேளிர் யானு நீயு மெல்வழி யறிதும் செம்புலப் பெயனிர் போல அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே. விளக்கம்: தெய்வத்தாலாய இயற்கைப் புணர்ச்சிக்குப் பிறகு, தலைவி தலைவன் தன்னை விட்டுப் பிரிதல் கூடும் என ஐயுறுகின்றாள். அதனைக் குறிப்பால் உணர்கின்றான் தலைவன். “நங்காய், என் தாயும் நின் தாயும் எம்முறையில் உறவினர்? எந்தையும் நுந்தையும் எந்த முறையில் உறவினர்? நீயும் நானும் எவ்வாறு முன்பு அறிந்தோம்? இம்மூன்றும் இல்லாதிருந்தும் செம்மண்நிலத்தில் பெய்த மழைநீர் அம்மண்ணோடு கலந்து அம்மண்ணின் தன்மையை அடைதல் போல அன்புடைய நம் நெஞ்சங்கள் தாமாகவே ஒன்றுபட்டன” என்கின்றான்.

இந்தக் கருத்துடைய சங்கப் பாடலைப் பாவேந்தர் எல்லோரும் அறியும் வண்ணம் எளிய இனிய நடையில் இசைப் பாடலாக அமைத்துள்ளார்.

என்தாய் யாரோ! உன்தாய் யாரோ! - பெண்ணே

என்தந்தை உன்தந்தை உறவினர் அல்லரே!

இன்றிங் கேஉனை எவ்வாறடைந்தேன்,

நீளன்னை எவ்வாறறிந்தாய்? - நாம்

8. இசையமுது இரண்டாம் தொகுதி - பக்கம் 23