பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் நடையில் சங்கப் பாடல்கள் 231 செம்மண் நிலமும் - பெய்த மழையும்போல் சேர்ந்தோம் அடடா இன்பம் ஆர்த்தோம் {ss% இரண்டு நெஞ்சில் வீறிட்ட காதலே இருவரை யும்சேர்த்த திவ்வைய மீதே மருண்ட மக்கள் மாப்பிள்ளை பெண்களை

மணத்தில் கூட்டுவதாக எண்ணுவார்’ i}

பாவேந்தரின் அடிச்சுவட்டைப் பின்பற்றி கலைஞர் டாக்டர் கருணாநிதியும், பெரும் புலவர் முரா. பெருமாள் முதலியாரும் சங்கப் பாடல்களை எளிமையாக்கி அனைவரும் படித்து நுகர வழி வகுத்ததைத் தமிழுலகம் நன்கு அறியும்.

சில துறைகளில் காதற் பாக்கள்: உயிரினத்தே தோன்றும் காதலுறவு உலகு தோன்றிய நாள்தொட்டு அன்றும் இன்றும் என்றும் மாறாதது; மறையாதது. ‘காதல் உணர்வோ உயிரின் இயற்கை” என்பது பாவேந்தரின் வாக்கு. ஆகவேதான் காதலைப்பற்றிப் டாடாத கவிஞர்களே இலர். பிறபொருள் பற்றிப் பாடப்பெற்றவை மறக்கப்படுவனவாயினும் காதற்பாடல்கள் மறக்கப் பெறாதனவாய்ச் சாவா நிலையைப் பெறுகின்றன. சங்கப் பாடல்களை அடுத்து பாவேந்தர்தான் காதல்பற்றி அதிகமான பாக்களை யாத்தவர் என்று இலக்கிய வரலாற்றில் இடம் பெற்றவர். நுணுக்கமறிந்து சுவைக் கேடின்றி காதற் பாக்களை அமைப்பதில் பாவேந்தருக்கு நிகர் பாவேந்தரேயாவார்.

பெயர் குறிப்பிடாமல் தலைவன், தலைவி என்று பொதுப்படப் பாடிய பெருமை சங்க இலக்கியங்களுக்கு உண்டு. அப்படிப் பெயர் குறிப்பிட்டால் அது தனிப்பட்ட சாதியினர், குடும்பத்தினர், தனிப்பட்டோர்பற்றிய பாடல்களாக அமைந்து குறிக்கோள் நிலையைக் குறைத்துவிடும் என்று பெயர் குறிப்பிடுவதை விலக்கினர் சங்கச் சான்றோர். ஆனால், பாவேந்தர் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் நோக்கத்தில் தலைவன், தலைவியர் என்ற நியதிக்கு

9. இசையமுது பகுதி-2- பக்கம் 24 10. காதல் பாடல்கள் பக்கம் 161