பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடுபொருள் Y 9

இது இங்கிலாந்து நாட்டிலுள்ள ஒருவன் வாயிலிருந்து வெளிப்படுவதாகக் கவிஞர் அமைத்தது. இறைநம்பிக்கையில் மக்கள் உழைப்பில் சிறிதும் நம்பிக்கையின்றிச் சாரற்ற சக்கையாய்க் கிடக்கின்றனரே என்று இறைக் கொள்கையைச் சாடுகின்றார் கவிஞர்.

“ஏற்றப்பாட்டு” என்ற தலைப்பில் இளைஞர்கட்குத் தன்மானக் கொள்கையின் அடிப்படைக்கருத்தாகிய பகுத்தறிவுப் பர்தையைக் காட்டுகின்றார்.

பச்சை விளக்கமும் - உன் பகுத்தறிவு தம்பி!

பச்சை விளக்காலே - நல்ல பாதை பிடிதம்பி!

பத்துடனே மூன்று - நீ பகுத்தறிவைப் போற்று.

அச்ச மில்லை தம்பி - நல்ல அறம் இருக்கும் பேறு. என்று பகுத்தறிவை உள்ளத்தில் ஊசியைப் போல் குத்திப் புகுத்துகின்றார்.

‘ஆண்குழந்தைத் தாலாட்டில் கடவுட் கொள்கையைச் சாடும் போக்கு அற்புதமானது.

‘எல்லாம் அவன்செயலே என்று பிறர்பொருளை வெல்லம்போல் அள்ளி விழுங்கும் மனிதருக்கும்

‘காப்பார் கடவுள் உமை கட்டையில்நீர் போகுமட்டும் வேர்ப்பீர் உழைப்பீர் எனஉணர்க்கும் வீனருக்கும்’ மானிடரின் தோளின் மகத்துவத்தைக் காட்டவந்த தேனின் பெருக்கே, என செந்தமிழே கண்ணுறங்கு"!

என்பது காண்க.

9. பாதா.க. மூன்றாம் பகுதி - பக்கம் 157 10. பா.தா.க.முதல் பகுதி-பக்கம்126