பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 பாவேந்தரின் பாட்டுத்திறன்

தன் பாட்டையே

அவன் சாட்டையாக்கினான்.

அவனுடைய

எழுத்துகள்

மட்டும்

இல்லாமல்

இருத்திருந்தால் -

தம்முடைய

கருத்துகள்

சனாதனச்

களுக்கு களிலேயே...

சங்கடப்பட்டுக்

கொண்டிருக்கும்’

இந்தப் புதுக் கவிதைகள் தம் பேனாவை அமிலத்தில் தோய்த்து எழுதிய பாவேந்தரை நமக்குப் பளிச்சென்று காட்டுகின்றன.

ஊமையாக இருந்துகொண்டு எத்தனையோ மக்களின் பேசாத

பேச்செல்லாம் பாவேந்தரின் கவிதைகளில் தொலைபேசியில் பேசுவதுபோல் பேசுகின்றன. பாரதிதாசன் கவிதைக் கனல்மீது பகுத்தறிவு என்ற தண்ணி ரைக் குடம் குடமாய்ச் சாய்க்கின்றார். இவரது பகுத்தறிவு திராவிடரகத்தைச் சார்ந்ததாயினும் அதில் சொந்த முத்திரை பதித்திருப்பதை எல்லா இடங்களிலும் காணலாம். சமூக அநீதிகளும், தாழ்த்தப்பட்டவர்களின் விம்மல்களும், பொருமல்களும் குமுறல்களும்; ஏழைகளின் அழுகுரல்களும் அந்த வறண்ட நெஞ்சங்களின் கோபதாபங்களும் பாவேந்தரின் பாடல்களின் வாயிலாகப் பழிவாங்கும் பேய்கள்போல் அலைவதைக் கான முடிகின்றது.ஊமை மக்களின் புரட்சிக் குரலுக்கு மறைவே இல்லை; பாவேந்தரின் கவிதைகளில் அவை மறைந்திருந்து நம் உட்செவிகளில்

1. பொய்க்கால் குதிரைகள் - பாரதிதாசன் - பக்கம் 101-105