பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 Y பாவேந்தரின் பாட்டுத்திறன்

போதும் வேறொன்றும் வேண்டா” என்ற கொள்கைப்பிடிப்புள்ளவர்கட்கு ஒர் எச்சரிக்கையையும் தருகின்றார்.

எங்கள்தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச் சொல்லித் தலைமுறைகள் பலகழித்தோம் குறைகளைந்தோ மில்லை தகத்தகா யத்தமிழைத் தாபிப்போம் வாரீர்” என்று மொழிச் சீர்திருத்தத்தை நாடுகின்றது கவிஞரின் விரிந்த உள்ளம்.

பிறிதோரிடத்தில் ஆங்கிலம் கற்பதை வரவேற்கின்றார்; இரு மொழிக் கொள்கையை ஆதரிக்கின்றார்.

பாங்கி ருக்கும்

பயனி ருக்கும்

உலகமொழி ஒன்று ஆங்கிலத்தை

உலகொருமை

அறிவுக்கேற்பாய்நன்று’ என்று ஆங்கிலத்தை வரவேற்பதையும்,

பன்மொழிகள்

கற்பதுவும்

படிப்புக் கழகாகும் இன்பத் தமிழை

ஏற்றதன் பின்

எய்துவதே சாலும்’ என்று பன்மொழிகள் கற்பதை ஏற்பதையும்,

ஈங்கிரண்டு

மொழிகள் போதும்

எண்ணமெலாம் ஓங்கும்’

33. பா.தா.க. முதல் தொகுதி- பக்கம் 95 34. ஒரு தாயின் உள்ளம் மகிழ்கின்றது - பக்கம் 60 35. ஒரு தாயின் உள்ளம் மகிழ்கின்றது - பக்கம் 60 36. தமிழைத் தமிழகத்தில் கட்டாய பாடமாக்கும் கொள்கையை ஜெயலலிதா அரசு

ஒப்புக் கொண்டது. (59.91 நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில்)