பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் பகரும் செய்திகள் w 257

வெல்லும் பெரியார் வெறும்பேச்சுக்காரரா? வீரத் தமிழர் வெறும்பேச்சுக்காரரா? என்று. சாதிஒழிப்பு பற்றிக் கவிஞர் மேலும் கூறுவார்: சாதி கனவிலும் தலைகாட் டாமல் காதிலும் சாதிக் கதைகேளாமல் ஒழிக்கப் படுவதை உணர எண்ணினால் விழிக்குக் கறுப்புக் கண்ணாடி வேண்டா! “ஒருவர்மேல் அன்பு வைத்தால்தான் ஒழியும் சாதி, வெறுப்பால் ஒழியாது” அடியோடு மனத்தை அகற்ற எண்ணுவோன் ஆணி வேர்மேல் அன்புவைப் பானோ?” என்று. பிறிதோர் இடத்தில்,

- சாதி அற்ற இடம் அல்லவோ அன்பு வெள்ளம் அணைகடந்து விளைநிலத்தில் பாயக் கூடும்? என்றும்,

சர்க்கரைப் பந்தலிலே தேன்மாரி பெய்யும், சாதிவெறி சமயவெறி தலைகவிழ்ந்தால்” என்றும் கூறித் தெருட்டுவர். மற்றோர் இடத்தில்,

சாதி மதத்தைத் தவிர்ப்பதே அறம்! அவற்றைப் பெருக்குதல் அறமே அல்ல’ என்று பகர்வர். மேலும்,

சாதியினை ஒழிப்பாரோ காந்தி என்று தாதுகலங்கிய கோட்சே கூட்டம் அந்தத் தக்கானைக் கொன்றதுதான் மெய்ம்மை யாகும்’ என்று ஒருபோடு போட்டு பார்ப்பனக் கூட்டத்தின் வாயை அடைக்கின்றார். இன்னும், 50. வேங்கையே எழுக! - பக்கம் 52 51. வேங்கையே எழுக! - 35 52. நாள் மலர்கள் - பக்கம் 48 53. நாள் மலர்கள் பக்கம் 56