பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 பாவேந்தரின் பாட்டுத்திறன்

உமியன்றே இங்குவந்த இந்தி மேதி ஒன்றுபட்டால் மாணவர்கள் தெரியும் சேதி உமிபறக்கும் மாணவர்கள் மூச்சு விட்டால் இத்தினனும் ச்ைசிலைதான் என்ன ஆகும்? சிமிழ்க்காமல் பார்த்தாலே இந்தி சாகும் திருவாசகம்படி முடிக்க லாகும்” இப்படிப் பல இடங்கள்!

சாதி ஒழிப்பு: சாதி ஒழிப்பு என்பது கவிஞரின் பேராதரவு இவரைப்போல் எவரும் இதுகாறும் அதற்கு ஆதரவு காட்டவில்லை. இதனைக் கவிஞர் பாடல்களின் செய்தியாகக் காண முடிகின்றது. அரசு கூட அதற்கு ஆதரவு தருவதுபோல் மழுப்புகின்றது. தெருப்பெயர்களிலுள்ள சாதிப்பெயர்களை நீக்கிவிட்டால், சாதி ஒழிப்பு நிறைவேற்றி விட்டதாக அற்ப மகிழ்ச்சி கொள்ளுகின்றது. துணிவும் நல்லெண்ணமும் இருந்தால் வாக்காளர் பட்டியலில் சாதிப்பெயர்களை நீக்க வேண்டும். பள்ளிகளில், பதிவேடுகளில் சாதிப்பெயர்கள் பதிவு பெறுதலைத் தவிர்க்க வேண்டும். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை மட்டிலும் கருத்தில்கொண்டு சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு செய்தல், மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களை இந்த அடிப்படையில் சேர்த்தல் முதலிய முறைகளைக் கைவிடுதல் வேண்டும். சட்டத்தின்மூலம் எதையும் செய்ய முடியாது என்பதை அரசு உணர்ந்துள்ளது. காரணம், சாதி அடிப்படையில் வாக்காளர்களிடம் வாக்குகள் பெற்று தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களால் ஏற்பட்ட அரசுதானே.

ஒரு சமயம் இராஜாஜி சொன்னார்; “வெறும் கூச்சலிடுவதால் சாதி வேர் அறாது” என்று. நம் கவிஞர் கூறுவார்: பெரியார் தாமும் பெரியார் கொள்கைக் குரியார் தாமும், சாதிக் கொள்கைநோய் ஒழிக்கும் பணியில் ஒய்விலா துழைப்பது வையம் அறியும் மறுக்க ஒண்ணாது!

49. வேங்கையே எழுக! - பக்கம் 115