பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 8

பாடல்கள் பகரும் செய்திகள் 253 என்று உறுதியுடன் கூறுவார்.

கனிமாமரம் வாழைக்காய்

காய்க்காதெனில் இரண்டும் தனித்தனிச் சாதி.

எருமையைப் பசுசேர்தல்

இல்லை; இதனால்இவை ஒருசாதி இல்லை

ஒரு தாழ்ந்தோன் உயர்த்தாளை

ஒப்பக் கருக்கொள்ளுங்கால் இருசாதி மாந்தர்க் குண்டோ?” என்று அறிவியலடிப்படையில் சாதிக் கொள்கையைச் சாடுவார்.

பஞ்சமர் பார்ப்பனர் என்பதெல்லாம் - இவை பாரத நாட்டுப் பழிச்சின்னத்தின் பெயர்.” என்று மிக்க நாணத்துடன் கூறுவார். மற்றோர் இடத்தில்,

சாதி என்ற பண்டம் - நம் தாய கம்சுரண்டும்! - அது தீது வைத்த குண்டம் - இத் தீச்செயலை ஆதரிப்போன் - செல்வம் சேர்க்க அலையும் முண்டம்” என்று ஒரு “போடு போட்டு” சாதி என்ற பண்டத்தைக் காட்டி “வாணிகம் நடத்துவோன் பணப்பேயாகச் செல்வம் சேர்க்க அலையும் முண்டம்” (தலையில்லாதது) என்று சாடுகின்றார். இத்தகைய செய்திகளையும் நமக்குத் தருவார் கவிஞர் பெருமான்.

பெண்ணுலகம் போற்றல்: பெண்ணுலகத்தைப் போற்றும் பாங்கில் பெண் கல்வி, பெண்ணுரிமை, பெண் விடுதலை, ஆண்-பெண் சமத்துவம், காதல் திருமணம், கலப்பு மணம், மறுமணம், முதலியவற்றை வற்புறுத்துவதையும் குழந்தை மணத்தைக் கடிவதையும் நாம் இவர்தம் பாடல்கள் தரும் செய்திகளாகப் பெறுகின்றோம். இவை சமூகத்தை

60. பாதா.க. தொகுதி - 3. சமத்துவப்பாட்டு பக்கம் 194 61. பா.தா.க. முதல் தொகுதி (சேசு பொழிந்த தெள்ளமுது) - பக்கம் 163 62. வேங்கையே எழுக! - பக்கம் 58