பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 பாவேந்தரின் பாட்டுத்திறன்

புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் பொதுவுடைமை கொள்கை திசையெட்டும்

சேர்ப்போம்.” என்ற கவிஞரின் சங்க நாதம் இன்றும் நம் செவியில் ஒலித்துக் கொண்டுள்ளது. இதைத் தவிர கவிஞர் இக்கொள்கையை இயற்கை தரும் பாடமாக நமக்குக் காட்டுவது கவிஞரிடம் அமைந்திருக்கும் “ஆசிரியப் பண்பை பளிச்சிட்டுக் காட்டுகின்றது.

பண்டங்கள் பெருக்குவதின் மூலம் நாட்டில்

பணக்காரன் சுரண்டு கின்றான் வறுமைநோயை எண்டிசையும் பரப்புகின்றான் இதற்குமாறாப்

இயற்கைவிளைபொருள்கள்நமைச் சுரண்டல்

இல்லை; “நண்பர்களே, உமக்குண்மை ஒன்று சொல்வேன்.

தானிலத்தில் வளர்ந்து பயன் விளைத்த போதும் கொண்டெவற்றை யும்நாங்கள் தின்பதில்லை;

கொழுப்பதில்லை கொடுக்கின்றோம்

உழைத்தோருக்கே” என்றன்முன் விளைந்தபல புல்லும் ஏனை

எழுந்தசெடி, கொடிமரமும் இயம்பக் கேட்டேன் நன்று.இதனை நாடெங்கும் சொல்லு கின்றேன்

நாட்டில்பொதுவுடைமைக்கு வித்தீ தென்றேன் கொன்ற ழிக்கும் முதலாளி என்றில் லாமல்

கூட்டுடைமை பயன்மரமாய், இயற்கை அன்னை அன்புயிராய், தொழிலியலை மாற்றல் வேண்டும்

அதற்குப்பின் துன்பில்லை, கரண்டல் இல்லை” படிப்பதற்கும் கேட்பதற்கும் இக்கொள்கை நன்றாயுள்ளது!

சுமார் எழுபது ஆண்டுகட்கு முன்னர் இரஷ்யப் புரட்சியினால் ஜார் சக்கரவர்த்தியின் ஆட்சி விழுந்தது. உலக மக்கள் யாவரும் பாராட்டினர். கவியரசர் பாரதியார் கூட ஆறு பாடல்கள் பாடி “புதிய இரவியாவைப் பாராட்டினார்.

66. பாதா.க. முதல் தொகுதி பக்கம் 158. 67. குயில் பாடல்கள் - பக்கம் 77