பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடுபொருள் 23 தீங்கனியைச் செந்தமிழைத்

தென்னாட்டின் பொன்னேடை உயிராய்க் கொள்வீர்”

இவ்வாறு அவர் மொழிக்கொள்கை பாடுபொருளாகின்றது.

6. பெண்ணுக்குரியவை

(அ) காதல்: காதல் என்ற கருத்து உலகியல் முறையில் எத்தனையோ விதமாகப் பாடுபொருளாக அமைந்து கிடக்கின்றது. “காதல் பாடல்கள்”, “காதல் நினைவுகள்” என்ற இரு தொகுப்புகளில் காதலின் பல்வேறு பரிமாணங்கள் பாவேந்தரின் பாடல்களில் பாடுபொருளாய் அமைந்து பாலாய், தேனாய், கன்னலாய், கற்கண்டாய் இனிக்கின்றன. (1) ஆடுகின்ற ஆரணங்கைக் காட்டும் சொல்லோவியங்கள் இவை:

விழிஒடும் கோணத்தில்

மீளும்; பொருளின் வழிஒடும்; புன்சிரிப்பில்

மின்னும் - கழிந்தோடிக் கைம்மலரில் மொய்க்கும்:

அவள்நாட்டியத்துக் கண்கள்என் மெய்ம்மலரில் பூரிப்பின்

வித்து (2)

சதங்கைகொஞ்சும் பாதம்

சதிமிதக்கும் வானில் மிதக்கும்.அவள் தாமரைக்கை மேலும் - வதங்கலிலாச் சண்பகத்து நல்லரும்பு

சாடைபுரி கின்றவிரல் கண்கவரும் செம்பவளக்

காம்பு (3)

இவை ஆறில் இரண்டு.

48. தமிழியக்கம்- பக்கம் 35