பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பனைத்திறன் Y 49

இயல் - 3

கற்பனைத் திறன்

கற்பனை என்பது புலன்கள் நேரே ஒரு பொருளை அநுபவியாத காலத்திலும் அந்தப் பொருளை நினைவிற்குக் கொண்டுவந்து அந்தப் பொருளினிடத்து மீண்டும் அநுபவத்தை ஏற்றவல்ல ஒருவகையாற்றல். கவிதைகளைக் கனிவித்துக் கற்போரின் மனத்தை விரிந்த பார்வையில் செலுத்தவல்லது. கவிதைகளின் பிற பண்புகளுக் கெல்லாம் அடிநிலமாக இருப்பதும் இதுவே. ரஸ்கின்’ என்ற மேனாட்டு துண்கலைத் திறனாய்வாளர் “கற்பனையின் தத்துவம் அறிவுக்கு எட்டாதது; சொற்களால் உணர்த்த முடியாதது; அதன் பலன்களை மட்டிலும் கொண்டே அஃது அறியப் பெறுவதொன்றாகும்” என்று குறிப்பிடுவர்.

தங்கத்தை உருக்கி விட்ட

வானோடை தன்னி லேஓர் செய்கதிர் மாணிக்கத்துச்

செழும்பழம் முழுதும் மாலை செங்குத்தாய் உயர்ந்த குன்றின்

மரகதத் திருமேனிக்கு மங்காத பவளம் போர்த்து

வைத்தது வையங் கான’ என்பது கவிஞர் காட்டும் மாலைநேரக் குன்றம். குறிஞ்சிநிலக் காட்சியே கொஞ்சு தமிழ்க் காட்சியாக அமைகின்றது. கைபுனைந்தியற்றாக் கவின்பெறு வனப்பை அங்குக் கண்டு மகிழலாம். தங்கத்தை உருக்கி விட்டாற்போல் துலங்கும் வானத்து ஒடையில் செங்கதிர் மூழ்கும் நேரம் மாலைக் காலம் என்பதை நாம் அறிவோம். அது மூழ்கும் இடம் குன்றம். பச்சைமா மலையில் பவழம் போர்த்தது போன்று மாலைக் கதிர் குன்றத்தை மறைக்கின்றது, இந்தக் கற்பனைச் சொல்லோவியம் படிப்போர் மனத்தில் கல்மேல்

1. அழகின் சிரிப்பு- பக்கம் 14