பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பனைத்திறன் Y 57

இயற்கை இயம்பும் பாடலாகக் கவிஞர் கூறுவது.

பண்டங்கள் பெருக்குவதின் மூலம் நாட்டில்

பணக்காரன் கரண்டுகின்றான், வறுமை நோயை எண்டிசையும் பரப்புகின்றான், இதற்கு மாறாய்

இயற்கைவிளை பொருள்கள் நமைச் சுரண்டல்

இல்லை, “நண்பர்களே, உமக்குண்மை ஒன்று சொல்வேன்;

நானிலத்தில் வளர்ந்துபயன் விளைத்த போதும் கொண்டெவற்றையும்நாங்கள் தின்ப தில்லை

கொழுப்பதில்லை; கொடுக்கின்றோம்

உலகத்தோர்க்கே. என்றன்முன் விளைத்தபல புல்லும் ஏனை

எழுந்தசெடி, கொடிமரமும் இயம்பக் கேட்டேன்; நன்றிதனை நாடெங்கும் சொல்லுகின்றேன்;

நாட்டில்பொதுவுடைமைக்கு வித்தீ தென்றேன்; கொன்றொழிக்கும் முதலாளி என்றில் லாமல்

கூட்டுடைமை பயன்மரமாய், இயற்கை அன்னை அன்புயிராய், தொழிலியலை மாற்றல் வேண்டும்;

அதற்குப்பின் துன்பில்லை; சுரண்டல் இல்லை.”

இயற்கையில் தாம் கண்ட உண்மைகளை பொதுவுடைமைக் கொள்கையுடன் இணைத்துக் காட்டுவதில் இயைபுக் கற்பனையைக் காண முடிகின்றது.

இன்னோர் எடுத்துக்காட்டு:

மண்மீதில் உழைப்பா ரெல்லாம்

வறியராம்! உரிமை கேட்டால் புண்மீதில் அம்பு பாய்ச்சும்

புலையர்செல் வராம்இ தைத்தன் கண்மீதில் பகலில் எல்லாம்

கண்டுகண் டந்திக் குப்பின்

8. குயில் பாடல்கள் - பக்கம் 77