பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58-Y_பாவேந்தரின் பாட்டுத்திறன்

இயைபுக் கற்பனை உணர்ச்சி, கருத்து, காட்சி, சூழல் முதலியவற்றில் ஏதேனும் ஒன்றால் முற்கண்டது போன்றதே இது என்று இரண்டையும் இணைத்து அழகுணர்வோடு ஆக்கிக்காட்டுவது “இயைபுக் கற்பனை’ எனப்படும். புற உலகில் காணும் நிகழ்ச்சி அகத்தில் அடங்கிக் கிடக்கும் உணர்ச்சியைத் தூண்டுகின்றது என்றாலும், பெரும்பாலும் உள்ளதுபவமே (Inner experience) அத்தகைய உணர்ச்சியைக் கிளர்ந்தெழச் செய்கின்றது என்று சொல்லலாம். எனவே, கற்பனை ஆற்றலைத் தூண்டுவதற்கு உள்ளதுபவமே தூண்டு கோலாக அமைகின்றது என்பது தெளிவாகின்றது. இத்தகைய கற்பனையைத்தான் இயைபுக் கற்பனை (Associated imagination) STsrlsingmi solois Glsiul f. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.” என்ற வள்ளுவத்தில் அடங்கியுள்ள கற்பனையும் இயைபுக் கற்பனையே.

பாவேந்தர் பாடல்களில் இத்தகைய கற்பனைகளைக் காணலாம்.

என்னகாண் புதுமை! தங்க

இழையுடன் நூலை வைத்துப் பின்னிய ஆடை, காற்றில்

பெயர்ந்தாடி அசைவ ததைப்போல் தன்னீரில் கதிர்கலந்து

நளிர்கடல் தெளிதல் கண்டேன்; உன்கதிர், இருட்ப லாவை

உரித்தொளிச்சுவையூட்டிற்றே! கவிஞர் முன்னமே தங்க இழையையும் நூலையும் இணைத்துப் பின்னிய ஆடையையும் அது காற்றில் அசைந்தாடுவதையும் கண்டுள்ளார். இதனை இப்போது கவிஞர் கடல் நீரின் பரப்பில் கதிரவன் ஒளிபட்டுத் தெறிக்கும் காட்சியுடன் இயைத்துக் காண்கின்றார். கற்பனை காட்சிக்கு மெருகூட்டி நிற்கின்றது.

6. குறள் 22 7. அழகின் சிரிப்பு. ஞாயிறு, பக்கம் 27