பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பு நெறி 79

சங்ககாலத்தில் ஆசிரியப்பாக்கள் மிகுதியாக வழங்கின. சங்கமருவிய காலத்தில் வெண்பாக்கள் செல்வாக்குப் பெற்றன. காப்பிய காலத்தில் விருத்தப்பாக்கள் செல்வாக்கு அடைந்தன. சந்தப் பாடல்கள் பெருகியது இடைக்காலம். சிந்து, கும்மி முதலியவை உருவாகி நிலைபெற்றது பிற்காலம். அண்மைக் காலத்தில் சிந்துப் பாடல்களின் வளர்ச்சியாகிய உருப்படிகள் (கீர்த்தனைகள் விரும்பிப் பாடப்பெற்றன. ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு வகை மிகுதியாகப் பாடப்பெற்றாலும், பிற பாடல்வகைகளும் சிறுபான்மை இடம் பெற்றே வந்தன. வானூர்திகள், இராக்கெட்டுகள் கண்டறிந்த பிறகு கூட பண்டைக்கால ஊர்திகளாகிய மாட்டு வண்டி, குதிரை வண்டி, தள்ளு வண்டி, இழுப்பு வண்டி இவை இன்றும் வழக்கில் இருந்து வருகின்றன அல்லவா? அதுபோலவே என்க.

பாவேந்தர் பயன்படுத்திய பா வகைகளை ஊன்றி நோக்கினால் அவை 39 என்று தெரியவரும். என் அருமை நண்பர் பெரும்புலவர் டாக்டர் இரா. திருமுருகன் ஆய்ந்து முடிவு கட்டியது இக்கணக்கு’. யாப்பு ஆய்வை உவப்பான பொழுதுபோக்காகக் கொண்டிருப்பவர் இந்த அறிஞர். கம்பராமாயணத்தை யாப்பு நோக்கில் ஆய்ந்து கம்பன் பாடிய வண்ணங்கள்’ (வானதி வெளியீடு) என்ற ஆய்வுநூலை வெளியிட்டு மகிழ்ந்தவர்.இனி பாவேந்தர் கையாண்ட பாவடிவங்களை நோக்குவோம்:

வெண்பா வகைகள்

முதலில் கவிஞர் பெருமான் கையாண்ட வெண்பா வகைகளை நோக்குவோம்.

1. குறள் வெண்பா: வெண்பாவின் பொதுவிலக்கணம் பொருந்தி முதலடி நான்கு சீருடையதாய் இரண்டாம் அடி மூன்று சீருடையதாய் இரண்டடிகளைக் கொண்டு வருவது.

2. பாவேந்தர் வழியா? பாரதி வழியா?” - பக்கம் 49 இவர் பாரதியார்

கையாண்ட பா வடிவங்கள் 29 என்றும் அறுதியிட்டுள்ளார்.

3. இந்த இயல் பெரும்பாலும் டாக்டர் இரா. திருமுருகனாரின் “பாவேந்தர்

வழியா? பாரதி வழியா?” என்ற நூலைத் தழுவி எழுதப்பெற்றது.