பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 147 முழுமதிபனையார் கவிஞர் ச. சிவப்பிரகாசம் புதுவை முத்தியால் பேட்டையில் பிறந்து, பாவேந்த ரிடம் தமிழ் பயின்று ஆசிரியர் பணிபுரிந்தவர் புதுவைச் சிவம். எழுத்துப்புயல் பாவேந்தரோடும், கொள்கை மறவர் ம. நோயேலோடும் தோள் கொடுத்துப் புதுவையில் சுய மரியாதை இயக்கத்தை வளர்த்தவர். ‘புதுவை முரசின் பொறுப்பாசிரியராக இருந்து பாதிரிமாரின் சட்டத் தாக்குதலுக்கு ஆளானவர். புதுவை நகர்மன்ற உறுப்பினராகவும், துணை மேயராகவும் பாராளுமன்ற மேலவை உறுப்பின ராகவும் பணி புரிந்தார். சங்கப் புலவர் கொல்லன் எழிசியைப் போல இவர் Ll LGosp (Janatha Steel Industries) (5 &gs&prisi. Gaujas நேரத்தில் கவிதையும் எழுதுகிறார். 1930 முதல் 1946 வரை பாவேந்தரோடு நெருங்கிப் பழகிய இவர் தம் நினைவுகளை இக்கட்டுரையில் நிழற்படமாக்கியிருக்கிறார். 1928ஆம் ஆண்டில் நான் இருபது வயது கட்டிளங்காளை, பகுத்தறிவுத் தந்தை பெரியார் அவர்களால் நடத்தப் பெற்ற குடியரசு இதழை என் நண்பர் ஒருவர் வாராவாரம் கொண்டு வந்து கொடுப்பார். அதைப் படித்து நானும் நண்பர்கள் சிலரும் அக் கொள்கையில் ஆர்வமுடையவரானோம். பின்னர் 1929இல் புதுவை முக்தியால் பேட்டையில் புதுமனை புகுவிழாவுக்குப் பெரியார் அழைக்கப்பட்டிருந்தார். அன்று அவரது சொற்பொழிவைக் கேட்டுச் சுயமரியாதை இயக்கக் கொள்கையில் தீவிரமாக ஈடுபடலானேன். இதே ஆண்டில் பெரியார் கொள்கைக்கு எதிர்ப்பாக வைதீக மாநாடு ஒன்றும் இங்கு நடத்தப்பட்டது. அந்த