பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 முழுமதியனையார் மாநாட்டின் போது, கனகசுப்புரத்தின வாத்தியார் (பாவேந்தர்) சுயமரியாதைக் கொள்கைக்கு ஆதரவாக இருப்பதறிந்து, அன்று முதல் அவரிடம் தொடர்பு கொண்டு பழகி வந்தேன். எங்கள் தொடர்பு 1946 வரை மிக நெருக்கமாக இருந்து வந்தது. இவ்வளவு காலம் யாரும் அவரிடம் நீடித்துப் பழகியதில்லை. பாவேந்தரிடம் இலக்கணம் பயின்று கவிதை எழுத வேண்டுமென்ற ஆர்வத்தால் நான் அவரை அடிக்கடி தொந்தரித்து வந்தேன். போதிய நேரம் இல்லாத காரணத்தால், என்னுடைய ஆவலை அவரால் நிறைவேற்றி வைக்க முடியவில்லை. 1930இல் தோழர் ம.நோயேல் அவர்களைப் பொறுப்பாசிரியராகக் கொண்டு புதுவை முரசு' என்னும் வாா இதழ் தொடங்கப்பட்டது. அவ்விதழின் நிர்வாகத்தை நான் கவனித்து வந்தேன். 1931இல் புதுவைப் பாதிரிமார்கள் 18 பேர் சேர்ந்து தோழர் ம. நோயேல் அவர்கள் மீது வழக்குத் தொடுத்தார்கள். அதனால் அவ்விதழின் பொறுப்பாசிரியர் பணியை நான் ஏற்றுக் கொள்ள வேண்டிய தாயிற்று. 1932இல் என்மீதும் மூன்று பாதிரிகள் வழக்குத் தொடுத் தார்கள். பொருளாதாரச் சங்கடம் புதுவை முரசிற்கு ஏற்பட்டதால், தொடர்ந்து அதை நடத்த முடியாமல் நிறுத்த வேண்டியதாயிற்று. பாவேந்தரின் எழுத்தாற்றலுக்குச் சாணைக் கல்லாக விளங்கியது புதுவை முரசு இதழ்தான். இதில் அவர் அளவற்ற கவிதைகள், கட்டுரைகள், குட்டிக் கதைகள், நாடகங்கள், கனல் தெறிக்கும் தலையங்கங்கள் எழுதினார். 1932இல் புதுவை அரசாங்கம் நடத்திவந்த தமிழாசிரியர் தேர்வுக்குத் தனிப்பட்ட முறையில் வகுப்பு நடத்தப் பாவேந்தர் முயன்றார். அதில் பலர் சேர்ந்து பயின்றனர். நானும் அதில் பயின்று 1934இல் தமிழாசிரியர் தேர்வில் வெற்றி பெற்றேன். இத்தேர்வின் பெயர் 'பிரவே தெ லாங்க் ஏந்திழேன்' என்பது. இதற்கிடையே தனிப்பட்ட முறையில் பாவேந்தரிடம் இலக்கணம்-யாப்புப் பயின்று கவிதை எழுதத் தொடங்கினேன். தமிழகத்தைப் பொறுத்தவரை, இவ்விருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களுள் திரு. பாரதிதாசன் அவர்கள், ஒரு தலைசிறந்த கவிஞராவார்! ஒப்பற்ற கவிஞர் எனினும் பொருந்தும். அவருக்குள்ள புனைபெயராகிய பாரதிதாசன் என்பதைக் கொண்டு