பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 பாவேந்தர் பற்றி...! முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் தமிழே பேச்சாகவும் மூச்சாகவும் கொண்டு வாழும் தமிழ்ப்பழம் முத்தமிழ்க் காவலர், சுரைக்கொடி கூரையெல்லாம் ஒடிப்படர்ந்தாலும், அதன் வேர் நிலத்தில் இருப்பதைப் போல அரசியல் பொருளியல் சமூகவியல்களில் இவருடைய சிந்தனைகள் ஒடிப் படர்ந்தாலும் வேர் தமிழ் நிலத்தில் தான்! தமிழுக்காக எதையும் விட்டுக் கொடுக்கத் தயங்காதவர்' என்ற பிடிவாத உணர்வே, இவருக்குப் பெருமை சேர்த்த அரசியல். வாழும் பெரியார். எனது முதற்கவிதைத் தொகுப்புக்கு எத்தனையோ பேர் முன்னுரை வழங்கியிருக்கிறார்கள். அவற்றுள் கி.ஆ.பெ. கொடுத்தது தான் முன்னுரை' என்றார் பாவேந்தர். எனவே முன்னுரைக்கு மதிப்புரை பெற்ற தமிழறிஞர் இவர். 'நான் பாரதிதாசன் கவிதைகளைக் கதைக்காக ஒரு முறை, கருத்துக்காக ஒருமுறை, கொள்கைக்காக ஒருமுறை, உணர்ச்சிக்காக ஒருமுறை, இனிமைக்காக ஒருமுறை, எழிலுக்காக ஒருமுறை படித்தேன். ஒவ்வொரு கவிதையும் ஒரு படித் தேன்! என்று பாவேந்தர் எழுத்தைப் பழச்சாற்று வரிகளால் பாராட்டும் இவர், அவரைப் பற்றிய நினைவுகளை இக்கட்டுரையில் நிறுத்தியிருக்கிறார். ஐம்பது ஆண்டுகட்கு முன்பு ஈரோட்டில் பெரியார் குடியரசுப் பத்திரிகையைத் தொடங்கி நடத்தி வந்தார். அப்பத்திரிகையில்