பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 நான் அறிந்த பாரதிதாசனார் பேராசிரியர் மயிலை. சிவமுத்து தமிழ்நாட்டில் தமிழ்த்தாத்தா என்ற முதிர்ந்த பட்டத்துக்கு உரியவர் இருவர். ஒருவர் டாக்டர் உ.வே.சா, மற்றொருவர் பேராசிரியர் மயிலை சிவமுத்து. பாவேந்தர் தமிழர்க்குச் சொத்துப்பாடல் இயற்றியவர். இவர் முத்துப்பாடல் இயற்றியவர். தமிழுக்கு வாழ்ந்தவர்; இந்தியை எதிர்த்தவர்; தமிழாசிரியர் பணிக்குப் பெருமை சேர்த்தவர்; தள்ளாடும் பருவத்தில் தமிழால் நடந்தவர். தமிழே சிவம்: சிவமே தமிழ்! பாவேந்தர் பற்றிய தம் பழுத்த அனுபவங்களை இக்கட்டுரை மூலம் நம் சிந்தனைக்கு விருந்தாக்கி யிருக்கிறார். "முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள். பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள். பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள் என்று நாவுக்கரசர் நவின்ற தாண்டக அடிகளுக்கு ஏற்ப நான் முதன்முதலில் பாரதிதாசனார் தம் புதுமைப் பாடல்களைத் தான் படித்துப் பார்க்க நேர்ந்தது. நான் அவரைப் பாராமலேயே அந்தப் பாவேந்தர் மீது பேரன்பு கொள்ளலாயினேன். ஏறத்தாழ இருபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பு என்று நான் எண்ணுகின்றேன்.