பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 முருகுகந்தரம் திருவாளர் மு. செல்லப்ப ரெட்டியார் பாவேந்தர் நடத்திய நாடகக் குழுவின் பொறுப்பாளராக இருந்தவர். பாவேந்தரின் நாடகத்துறை அனுபவங்களைக் கூறுவதற்கு இவரைத் தவிரத் தகுதியானவர் வேறு யாருமில்லை, அந்த வகையில் இவரது கட்டுரை இத்தொகுப்பில் சிறப்பான இடத்தைப் பெறுகிறது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள பிற அறிஞர்களின் கட்டுரைகளும் ஒவ்வொரு வகையில் தனிச்சிறப்புப் பெற்ற பொறுக்கு மணிகள். நீண்டநாள் காத்திருந்து மணந்த காதலிபோல் பல சந்திப்பிற்குப் பின் பேராசிரியர் அன்பழகனாரின் கட்டுரை என்னைத் தேடி வந்தடைந்தது. சர்வோதயத் தலைவர் எஸ்.ஆர்.சுப்ரமணியம் அவர்களின் கட்டுரை பாவேந்தரின் எழுத்து வடிவம்' என்று சொல்லலாம். பன்மொழிப் புலவரின் எண்ண அலைகளைச் சென்னை சென்று ஒலிநாடாவில் பதிவு செய்து வந்தேன். இம்மூன்று பேரறிஞர்களின் கட்டுரைகள் இதற்குமுன் நமது பார்வைக்குத் தட்டுப்படாத பாரதிதாசனை அகலத்திரையில் குளிர்ச்சியான வண்ணத்தில் காட்டுகின்றன. கடல்கடந்து தமிழ்பரப்பச் சென்று செக்கோஸ்லேவியாத் தலைநகர் பிராகுவில் விபத்தில் சிக்கி மடிந்த டாக்டர் திருமதி தேவகிருபை தியாகராஜன் அவர்களின் கட்டுரை துணிச்சலான கட்டுரை. தமிழ்த் தாத்தா மயிலை சிவமுத்துவின் கட்டுரையும் டாக்டர் முருகரத்தினம் கட்டுரையும் மிக நுட்பமான அரிய செய்திகள் பலவற்றை எடுத்துக் கூறுகின்றன. ஒவியர் வேணுகோபால சர்மா பாவேந்தரின் உள்ளும் புறமும் தெரிந்த உற்ற நண்பர். ஒரு கலைஞனுக்குரிய நுண்ணிய பார்வையோடு பாவேந்தரின் பண்பு நலன்களைத் தமது கட்டுரையில் ஒவச் செய்தியாக்கிக் காட்டியுள்ளார். தஞ்சை மராட்டிய ராவ்ஜி குடும்பத்தில் பிறந்து இளமையிலேயே கைம்பெண்ணாகி செட்டி நாட்டுச் செல்வரை மறுமணம் செய்து கொண்டு வாழ்ந்த மஞ்சுளாபாய் அம்மையார்-மிகவும் சுவையான பண்பு நலன்கள் வாய்க்கப் பெற்றவர். பாவேந்தருக்கு-உடன்