பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 339 போது நீதிக் கட்சி (Justice Party) செய்தித்தாள்கள் அங்கும் வரும். பாரதி அத்தாள்களை விரும்பிப் படிப்பார். ஒருநாள் பாரதியும் வ.வெ.சு. அய்யரும், நானும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். ஒரு நண்பர் நீதிக்கட்சித்தாள் ஒன்றை அங்கு கொண்டு வந்தார். வ.வெ.சு. அய்யரைப் பார்த்ததும், அதை மூடி மறைத்தார். அதைக் கண்ட வ.வெ.சு. அய்யர் என்ன ஒய்! ஜஸ்டிஸ் கட்சி பத்திரிகை கொண்டு வந்திருக்கிறீராக்கும்! அதையேன் மறைக்கிறீர்? நீங்களெல்லாம் எங்களை எதிர்த்து, இப்ப பிராமணரா வளர்றிங்களாக்கும்! நீங்களெல்லாம் பிராமணனா வளர்ந்துட்டா பிராமணன் அப்படியே இருப்பான்னு உங்க நினைப்போ? ஏய்யா! புல் பனையானா பனை மலையாகாதா?’ என்று கூறிச் சிரித்தார். அதற்குப் பாரதியார், "ஒய் அய்யரே! அறிவுத் துறையில் வேண்டுமானால் நீங்கள் அவர்களை வெல்லலாம். வீரத்துறையில் நீர் அவர்களை என்ன செய்துவிட முடியும்? பிராமணரல்லதார் உதைக்க ஆரம்பித்தால் நீங்கள் எங்கே ஒடி ஒளிவீர்?' என்று கேட்டார். அய்யர் பேசாமல் இருந்து விட்டார். பார்ப்பனரை எதிர்க்கும் உணர்வு அந்த நாளில் பாரதியாருக்கு உண்டு. பிராமணர்களை உண்மையான பிராமணர்; போலிப் பிராமணர் என்று பிரித்துப் பேசுவார். உண்மையான வைதீகமும், உண்மையான சீர்திருத்தமும் ஒன்று என்பது அவர் கொள்கை. 'காந்தியின் கொள்கையும் அதுதான் என்று பாரதி கூறுவார். பாரதியைப் பற்றிப் பாரதிதாசன் கூறிய கருத்துக்கள் இவை. பாரதிதாசன் கோனாப்பட்டில் தங்கியிருந்தபோது அடிக்கடி கூட்டங்களுக்குச் செல்வார். நானும் உடன் செல்வதுண்டு. ஒரு முறை புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள சிற்றன்னவாசலுக்குப் பாரதிதாசனும், நானும், சில நண்பர்களும் சென்றோம். அங்கே சிவனடியார் சங்கக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. நான் அதில் கலந்து கொண்டேன். எனக்குச் சைவத்திலும் ஈடுபாடு உண்டு. ‘என்னய்யா! நீர் சுயமரியாதைச் சங்கத்திலும் உறுப்பினர். நல்ல வேடிக்கை!" என்று கூறிச் சிரித்தார் பாரதிதாசன். சிற்றன்னவாசலில் உள்ள பல்லவர் கால ஒவியங்களைப் பார்த்து மகிழ்ந்து விட்டு அங்கிருந்த கோவிலுக்குள் நுழைந்தோம். அங்கு ஒரு வேர்ப்பலாமரம் இருந்தது. அதை எங்களுக்குக் காட்டி, "வேர்ப்பலா என்பது மரத்துள் தனி இனம். இதோ பாருங்கள் இதன் வேரிலேயே பழங்கள் இருக்கின்றன” என்று சொல்லி ஆளுக்கொரு பழத்தைப் பறித்துத் தந்தார். வேர்ப் பலாப்பழம் வேப்பம் பழத்தை விட சற்றுப் பெரிதாக இருந்தது. மிகவும் இனிப்பாக இருந்தது.