பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 செட்டிநாட்டிலிருந்துசென்னைவரை. பாட்டிலேயே வெளியாகும் என்றும் என்னிடம் குறிப்பிட்டார். முதல் இதழும் அனுப்பி வைத்தார். அவ்வேட்டில் திருக்குறளுக்குப் புத்துரை எழுதும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அம்முயற்சியில் தமக்குத் துணை புரிய வேண்டும் என்று சொல்லி ஒரு நண்பரை என்னிடம் துதாக அனுப்பி வைத்தார். நானும் இசைந்தேன். மீண்டும் ஒருமுறை புலவர் குழுவில் நானும் அவரும் சந்தித்தபோது திருக்குறளுக்குப் புத்துரை எழுதுவது பற்றி நீண்ட நேரம் உரையாடினோம். பெரியார் ஒருமுறை என்னிடம் திருக்குறளுக்குப் புத்துரை எழுதும்படி தூண்டினார். அப்போது 'கடவுள் வாழ்த்து என்பதை மாற்றி மனித இனத்தின் குறிக்கோள் என்று அதற்குத் தலைப்புத் தரவேண்டும் என்றும் கூறினார். "நான் திருவள்ளுவரையும் உயர்வாக மதிக்கிறேன்; உங்களையும் உயர்வாக மதிக்கிறேன். உங்களுக்காகத் திருவள்ளுவருடைய கொள்கையைப் பொய்ப்பிக்க நான் விரும்பவில்லை. அதேபோல் திருவள்ளுவருக்காக உங்களுடைய கொள்கையைப் பொய்ப்பிக் கவும் நான் விரும்பவில்லை. உங்கள் இருவருடைய கொள்கையும் ஒன்று என்று நான் எப்போது நினைக்கிறேனோ அப்போது எழுதுகிறேன்" என்று பெரியாரிடம் சொன்னேன். இதை நான் பாரதிதாசனிடம் கூறியபோது, "பெரியார் சொன்னது கிட்டத்தட்ட சரிதான்; முழுக்கவும் சரியில்லை. ஆனால் பெரியார் சொன்ன குறிக்கோளின் அடிப்படையிலேயே தொடக்க காலச் சைவசித்தாந்தமே அடங்கியிருக்கிறது. நடுவில் ஆரியம் கலந்ததால் அதன் தோற்றங்களெல்லாம் மாறியிருக்கின்றன. சைவ சித்தாந்தத்தைப் பகுத்தறிவுக் கண்ணோட்டத்தோடு படித்தால், திருவள்ளுவருடைய கருத்துக்குப் போகலாம்" என்று அவர் குறிப்பிட்டார். பாரதிதாசன் கூறிய இந்த விளக்கம் எனக்குப் பிற்காலத்தில் பெரிதும் கைகொடுத்து உதவியது. இந்த அடிப்படையில்தான் நான் திருக்குறளுக்கு உரை எழுதத் தொடங்கினேன். பாரதிதாசன் இப்போது உயிரோடிருந்தால், அந்த உரையை விரும்பி வரவேற்றிருப்பார். காந்தியடிகள் ஒருமுறை இலண்டன் ஒலிபரப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றியபோது நல்ல குறிக்கோளை நாடிச் செல்லும் உள்ளப் பண்புதான், நாகரிகத்தின் வளர்ச்சியாக அமைந்தது என்று குறிப்பிட்டார். கடவுளுக்கு அவர் கொடுத்த இலக்கண விளக்கமும், 1) A tendency towards good end is the evolution of civilization-Mahatma Gandhi.