பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேந்தர்-ஒருபல் c - 367 இன்னும் அந்தச் சொற்கள் என் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. இது நட்ட நடுத்தெருவில், ஒரு கும்பலை வைத்துக் கொண்டு அவர் எனக்கு இட்ட கட்டளை என்றே சொல்லுவேன் அவரது கொள்கை மேடையேறிப் பேசும் போது உள்ளத்தை அப்படியே கொட்டுவது. >k 1940-ஆம் ஆண்டு. 18 மாதங்கள் சிறையில் கழித்துவிட்டு, நான் விடுதலைபெற்று வெளியேறிய நேரம். விடுதலை பெற்று வெளியில் வந்ததும், அன்று மாலை பாவேந்தரைப் பார்ப்பதற்காகச் சென்றேன். மிஷன் வீதியில் மயிலம் மடத்துக்கு எதிரில் முனைப் பங்களா வீட்டில் பாவேந்தர் குடியிருந்தார்; என்னைக் கண்டதும் துள்ளி வந்து கைகளைப் பிடித்து வரவேற்றார். - 'சிறையில் உனக்கு அதிகத் தொந்தரவு கொடுத்தார்களாமே!’ என்றெல்லாம் விசாரித்துத் தனது உள்ளக் குழைவினை உணர வைத்தார். சிறையில் இருக்கும் போது, வெளியிலிருந்து வரும் செய்திகள் பலவாறாகக் கூட்டியும் குறைத்தும், வேறு வடிவம் பெற்றும் வரும். அவ்வாறு வந்த செய்திகளில் ஒன்று, திருவாளர் செல்லன் நாயக்கர் அவர்கள் எங்கள் இயக்கத்துக்கு விரோதமாகப் பல காரியங்களைச் செய்தார் என்பது. நான் பொதுக்கூட்டங்களில் வழக்கறிஞர்களைத் தாக்கிப் பேசிய காரணத்தால் என் மீது சுமத்தப்பட்ட எந்த வழக்குக்கும், எந்த வழக்கறிஞரும் ஆஜர் ஆகக்கூடாது என்று வழக்கறிஞர்கள் மன்றத்தில் பூரீமான் நாயக்கர் கூறினார் என்பதே அச்செய்தி, அதைப் பற்றியும் அம்மன்றத்தின் முடிவினை மீறி, பூரீமான் சவரிநாதன் என்ற வழக்கறிஞர் எனக்காகப் பேச முன் வந்தது பற்றியும் இன்னும் வேறுபல செய்திகள் பற்றியும் நானும் பாவேந்தரும் நெடுநேரம் வரையில் பேசிக் கொண் டிருந்தோம். 'நீங்கள் கூடச் செல்லன் நாய்க்கரை ஆதரித்ததாகச் சிறைக்குள் செய்தி அடிபட்டது” என்று நான் பாவேந்தரைப் பார்த்துக் கூறினேன். அவர் மீது இப்படி யாராவது சொன்னால், அதை எப்போதும் பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டார். அத்தகைய கட்டுக் கதைகளின் கர்த்தா யாரென்று யூகித்துக் கொண்டு இது அவன் வேலை என்று மட்டும் சொல்வார். இது என்னைப் பற்றிய விவகாரமாதலால் வழக்கத்துக்கு மாறாகப் பதட்டம் கொண்டார். "எவன் சொன்னான்? செருப்பால் அடி! ஏம்பா! இதோ ஒன்றரை வருடம் சிறையில் கழித்து வந்து நிக்கற உனக்குப் பாதகமாய்