பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422 பாவேந்தர்-நான் கண்டதும் கேட்டதும் பாவேந்தர் இராமன் தெருவில் குடியிருந்த போது எனக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பிரெஞ்சு ராணுவத்தில் பணிபுரிந்து ஒய்வு பெற்ற ஒபான் ரங்கசாமியின் இல்லத்தில் பெண்ணெடுக்க நாங்கள் முடிவு செய்திருந்தோம். திருமணத்துக்கு நாளும் குறிக்கப்பட்டது. திருமணம் பண்ருட்டியில் நடைபெற இருந்தது. நான் பாவேந்தர் தலைமையில் திருமணம் செய்து கொள்ள விரும்பினேன். என் கருத்தை உணர்ந்த பாவேந்தர், "என் பிள்ளைக்கு நான் தான் திருமணம் செய்வேன். நான் கட்டாயம் திருமணத்துக்கு வந்து நடத்திக் கொடுப்பேன். கவலைப்படாமல் போ!' என்று கூறி என்னை அனுப்பி வைத்தார் பாவேந்தர். திருச்சி கபேவில் அவர் தங்குவதற்கு முதல் நாளே ஓர் அறை ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் நாள் இரவே பாவேந்தர் பண்ருட்டி வந்து விட்டார். என் பெற்றோர் தமது கையால் வாழ்த்தி எடுத்துத் தந்த மங்கல நாணை மணப்பெண்ணின் கழுத்தில் சூட்டினேன். உடனே அங்கிருந்த பெரியோர்கள் பாவேந்தர் காலில் விழுந்து வணங்கும்படி எங்களைப் பணித்தார்கள். பாவேந்தர் உடனே எழுந்து, "முதலில் உன்னுடைய பெற்றோரை வணங்கு. அதன்பிறகு யார் காலில் வேண்டுமானாலும் விழு” என்று என்னைப் பார்த்துச் சொன்னார். சென்னையில் நானும் என் மனைவியும் தனிக்குடித்தனம் நடத்திய பொழுது பாவேந்தர் இரண்டு மூன்று முறை என் இல்லத்துக்கு வருகை தந்தார். அவருக்கு நாங்கள் விருந்து படைத்தபோது சில உணவு முறைப் பக்குவங்களை என் மனைவிக்கு எடுத்துச் சொல்லுவார். வடுமாங்காய் ஊறுகாய் எப்படிப் போடுவது என்று சொல்லுவார். பண்ருட்டி நிலக்கடலைப் பருப்பு பவளம் போல இருக்கிறது என்று பாராட்டுவார். ஒருமுறை கோவையில் புலவர் குழுவின் கூட்டம் நடைபெற்றபோது பாவேந்தர் என்னையும் உடன் அழைத்துச் சென்றார். புகழ் பெற்ற புலவர்கள் தங்குவதற்கு வெளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாவேந்தருக்கும், டாக்டர் மு.வ. அவர்களுக்கும் கோவைப் பேரறிஞர் ஜி.டி. நாயுடுவின் இல்லத்தில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நானும் பாவேந்தரோடு தங்கியிருந்தேன். திருவாளர் நாயுடுவும் எங்களோடு சாப்பிட்டார். சாப்பிட்டு முடிந்ததும் முக்கோண வடிவில் வெட்டப்பட்ட பப்பாளிப் பழத் துண்டில் ஒரு சிறு கரண்டியைச் செருகித் தந்தார்கள். ஐஸ்கிரீம் சாப்பிடுவது போல் பழத்தின் ஊனை நாங்கள்