பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனைவர் மு. பொன்னவைக்கோ பாரதிதாசன் துணைவேந்தர் பல்கலைக்கழகம் பல்கலைப்பேரூர், திருச்சிராப்பள்ளி-24 சிறப்புரை "மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாம்மாய்ந் தனரே (புறநானூறு - 165) எனும் பெருந்தலைச் சாத்தனாரின் பாடலுக்கேற்றாற்போல், தம் புகழை மன்னுலகில் நிறுவியதன் பின்னர் மாய்ந்தவர் மிகச் சிலரே ஆவர். அவர்களுள் மிகுபுகழ் கொண்ட பாவேந்தர் பாரதிதாசனும் ஒருவர். தாயைப் பின்தொடர்ந்து செல்லும் சேயைப்போல், பாரதிதாசன் பாட்டுப் பாதையில் நடந்து சென்ற அவரின் வழித்தோன்றல்கள் பற்பலர். அவர்களுள் சிறந்த கருத்தாளுமையும் சொல்லாளுமையும் கொண்டிலங்கியவர் முருகுகந்தரம். காலத்தால் அழியாத இலக்கியப் படைப்புகளின் வழி, கவிஞர் முருகுசுந்தரம் மக்கள் மனத்தில் நிலைபேறு பெற்றுள்ளார். புதுப்புது உத்திகளைக் கையாண்டு பழமைமிகு தமிழ்க்கவிதை உலகிற்கு வளமை சேர்த்தார். மனத்தின் இறுக்கத்தை நெகிழச் செய்யும் வனப்புமிகு மலைச்சாரல் போலவும் உடலணு ஒவ்வொன்றையும் சிலிர்க்கச் செய்து குளிரூட்டும் தென்றலைப் போலவும் இவரது படைப்புகள் அமைந்துள்ளன. சமூகக் கொடுமைகளை விளக்கிக் காட்டுவதில் இவரது கவிதைகள் கோடை வெயிலுக்கிணையாக விளங்குகின்றன. ஆறு கவிதை நூல்கள், மூன்று இளைஞர் இலக்கியங்கள், பதினெட்டு உரைநடை நூல்கள் யாவும் கவிஞர் முருகுசுந்தரத்தால் தமிழ் இலக்கிய உலகிற்கு வழங்கப்பட்டுள்ளன. இவரின் ஆற்றலையுணர்ந்த தமிழ்நாட்டரசு, இவருக்கு 1976ஆம் ஆண்டு