பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 நினைவில் நின்றவை தமக்கு முன்னாலிருக்கும் மேசை விளிம்பில் வைத்துக் கொண்டு பேசுவார். தாகூரிடம் ஒரு விநோதமான பழக்கமுண்டு. அவருடைய கையெழுத்துப் படியில் மைசிந்தி விட்டால் அல்லது எழுத்தில் பிழை ஏற்பட்டு விட்டால் அதை ஓர் ஓவியமாக மாற்றிவிடுவார். அவரைப் போலவே கையெழுத்துப் படியில் மைசிந்தி விட்டால் அதைப் பூவாக மாற்றும் பழக்கம் பாவேந்தருக்கும் உண்டு. அவ்வாறு அவர் மாற்றிய கையெழுத்துப்படியொன்று என்னிடம் இருக்கிறது. பாவேந்தரின் ஏகாந்தத்தை யாராவது திடீரென்று சென்று கலைத்தாலோ, அவரை அனாவசியமாகச் சீண்டிவிட்டாலோ அவருக்குக் குபிரென்று கோபம் வரும். அப்படி இரண்டொரு நிகழ்ச்சியைப் பார்த்திருக்கிறேன். சென்னை இராமன் தெருவில் அவர் குடியிருந்த பங்களாவின் உரிமையாளர் ஒரு ரெட்டியார்; வசதியானவர்; பாவேந்தரின் மீது மிக்க மதிப்புடையவர். ஒருநாள் அதிகாலையில் ஆழ்ந்த சிந்தனையோடு பாவேந்தர் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். அன்று சமையற்காரத் தாயாரம்மாள் ஊரிலில்லை. பாவேந்தர் அதிகாலையில் காஃபி அருந்தும் வழக்கத்தை நினைவில் கொண்டு வீட்டுக்கார ரெட்டியார் கையில் சூடான காஃபியோடு பாவேந்தரின் அறையில் நுழைந்தார். அவரைப் பார்த்த பாவேந்தருக்குச் சுரீரென்று கோபம் வந்துவிட்டது. "என்னைக் கேட்காமல் உங்களை யாரிங்கே காஃபி கொண்டு வரச்சொன்னது?’ என்று அதட்டலோடு கேட்டார். ரெட்டியார் முகவாட்டத்துடன் திரும்பிச் சென்று விட்டார். பாவேந்தர் குடியிருந்த பங்களா மேல்மாடியில் ஒரு தெலுங்குத் திரைப்பட டைரக்டர் குடியிருந்தார். பாவேந்தர் வீட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த பொன்னடியை அவர் ஏதோ ஒரு காரணத்திற்காகக் கூப்பிட்டுச் சற்றுக் கடுமையான சொற்களைப் பயன்படுத்தித் திட்டி விட்டார். இதைக் கேட்ட பாவேந்தருக்கு வயதையும் மீறிய பெருஞ்சினம் வந்துவிட்டது. வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வெளியிலே ஓடிவந்தார். மாடியிலே இருந்த தெலுங்கு டைரக்டரைக் கூவியழைத்து இறங்கி வாடா கீழே என்று போர்க் கோலத்தோடு நின்றார். அவரைச் சமாதானப்படுத்தி உள்ளே அழைத்துச் செல்லப் பெரும்பாடாய்ப் போய்விட்டது. பாவேந்தர் சென்னையில் வாழ்ந்தபோது வெளியில் எங்கே சென்றாலும் வாடகைக் காரில் (taxi) தான் செல்வது வழக்கம். பாண்டிபஜாருக்குக் கீழே இருக்கும் ராஜகுமாரி திரைப்படக்