பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் நினைவுகள்|110 துக்கு ஒரிரு முறை சென்றதுண்டு. என்னைக் காரிலேயே உட்காரும்படி கையமர்த்திவிட்டு அவர் மட்டும் வீட்டுக் குள் செல்வார். அவர் உள்ளே கால்டி எடுத்து வைத்த தும் வரவேற்பு பலமாக இருக்கும். சிற்றுண்டியும் நடக் கும். ஆல்ை சோர்ந்த முகத்தோடு திரும்பிவருவார். 'பாண்டியன் பரிசு பெரிய அளவில் திரைப்படமாக ஆக்கப் பட வேண்டும் என்று பாவேந்தர் விரும்பினர். அதில் நடிகர்கள் சிவாஜிகணேசன், எம். ஆர். ராதா, சரோஜா தேவி ஆகியோர் நடிக்க ஏற்பாடாகியிருந்தது. இயக்குநர் பீம்சிங் படத்தை இயக்க ஒப்புக் கொண்டிருந்தார். பாண் டியன் பரிசுப்படத்திற்கான இயற்கைக் காட்சிகளை மைசூ ரில் எடுக்க வேண்டுமென்று பாவேந்தர் விரும்பினர்; அப் படத்தில் வரும் போர்க் காட்சிகள் சிறப்பாக இருக்க, அழகிய பந்தயக் குதிரைகளைப் பயன் படுத்த வேண்டும் என்று பீம்சிங்கிடம் கூறினர். பாவேந்தரின் பெரிய திட் டத்தையும் சுருங்கிய கையிருப்பையும் மோப்பம் பிடித்து அறிந்து கொண்ட படத்துறை நண்பர்கள் இவரைப் பார்த் தால் ஒதுங்கிச் செல்லத் தொடங்கினர். 'வரலாற்றுப் படம் பிடிக்க நிறையச் செலவாகும்; ஏதாவது சமூகப் படம் எடுங்கள்; ஒத்துழைக்கிருேம் என்று சொல்லி ஓர் ஆங்கில நாவலையும் இவர் கையில் திணித்து விட்டுச் சென்று விட்டனர். அதன்பிறகு அந்நாவலைத் திரைக் கதையாக்கி அதற்கு வசனமும் எழுதி முடித்தார் பாவேந் தர். எதை எழுதி என்ன பயன்? நடிகர்கள் வீடுகளுக்கு நடந்து நடந்து கால் ஓய்ந்ததுதான் மிச்சம். தமிழ்நாட்டுப் படத் துறைக்காரர்கள் செப்பிடு வித்தைக் காரர்கள். .ெ ச ப் பி டு வித்தை தெரிந்தவன் தான் படத் துறைக்குப் போகவேண்டும். பாவேந்தருக்குச் செப்பிடு வித்தை பழக்கமில்லாத ஒன்று. வெறுங்கையால் முழம் போடுவது தான் படத்துறையின் புகுமுகத் தேர்வு. எப் படியாவது ஏமாந்தவர்களை வளைத்துப் போட்டு ஆயிரம் அடியாவது படத்தைப் பிடித்து விடவேண்டும். அதன்