பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் நினைவுகள்/112 தரின் நண்பரான ஓர் இசையாசிரியர் பலமுறை விரும்பிக் கேட்டதற்காகக் கண்ணன் கிளிக்கண்ணி (40 வரிகள்) ஒன்று பாடிக் கொடுத்திருக்கிருர். வாணி, சக்தி, கண் ணன் பற்றிய இப்பாடல்கள் யாவும் பாவேந்தர் பாட்டில் காணப்படும் பாரதிபாணியின் எதிரொலிகள்." திருவள்ளுவர் படத்தை எழுதிய ஓவியர் திரு. வேணு கோபால சர்மா பாவேந்தருக்கு .ெ ந ரு ங் கி ய நண்பர். அவரைச் சில ஆண்டுகளுக்கு முன் நான் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது பாவேந்தரைப் பற்றி ஒரு செய்தி யைக் குறிப்பிட்டார். சர்மா ஒரு பக்தர். பாவேந்தர் சென்னையில் ஒருமுறை தங்கியிருந்தபோது, சர்மாவும், உடன் இருந்தாராம். சர்மா தாம் வழிபடும் அம்பிகை யின் மீது ஒரு பாடல் எழுதித் தரும்படி வேண்டிக் கொண் டார். பாவேந்தர் மறுத்தார். சர்மா பலதடவை வற் புறுத்தவே சரி, .ெ சா ல் றே எழுதிக்க...' என்று கூறி விட்டுப் பாடலைச் சொல்லத் தொடங்கினர் பாவேந்தர். அந்தப் பாடல் தம்மிடத்தில் வந்த பிறகு, தம் வாழ்க்கை யிலேயே பெரிய திருப்பம் ஏ ற் ப ட் டு விட்டதென்றும், அதன் பிறகு தாம் வாழ்க்கையில் தொல்லை எதுவுமின்றி வசதியோடும் புகழோடும் இருப்பதாகவும் சர்மா என்னி டம் கூறினர். - பாவேந்தருடைய வாழ்க்கையில் கடவுள் இவ்வாறு பல இடங்களில் குறுக்கிட்டிருக்கிருர். நான் பாவேந்தரோடு சென்னையில் பழகிய நாட்களில் ஒருநாள் கூட என்னிடத் தில் கடவுளைப் பற்றி அவர் பேசி நான் கேட்டதில்லை. ஆளுல் கடவுள் பக்தர் சிலர் அ வ ரி ட் ம் உள்ளங்கலந்த நண்பர்களாகப் பழகியதைப் பார்த்திருக்கிறேன். மார டைப்பால் தாக்கப்பட்டுச் சென்னை அரசினர் மருத்துவ மனையில் படுத்திருந்தபோது, "அப்பா! அப்பா!' என்று அன்போடு பழகும் அனுசூயா வடபழனி முருகன் கோவி லிலிருந்து திருநீறு கொண்டு வந்து பாவேந்தர் நெற்றி யில் பூசினர். 'என்ன மந்திரமா?’ என்று சொல்லிப்