பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுசுக்தரம்/129 தெ.பெ.மீ. அக் குழுத் தலைவர். எங்களுள் மாறுபாடின்றி மூவரும் பாவேந்தர்தாம் பரிசுக் குரியவர் என்ற ஒரே முடிவுக்கு வந்தோம். அங்ங்னமே எங்கள் பரிந்துரையை முறைப்படி ஞானபீடத்திற்கு அனுப்பி வைத்தோம். இத்தகவலை பாவேந்தர் மகனிடம் யானே நேரில் கூறினேன். இதில் ராஜாஜி எந்தவிதத்தும் தலையிடவில்லை. தலையிட வும் மாட்டார்கள். ஆளுல் எங்கள் பரிந்துரை பற்றி அவர் களிடம் கூறினேன். அவர்கள் எங்கள் முடிவு சரியானதே என்றும் கொள்கைக் கோலை வைத்துக் கவிதையை அளக் காத எங்கள் முறையே கன்றென்றும் கூறிப் பாராட்டினர். பாரதிதாசன் கவிதை கலத்தையும் மனிதப் பண்பாட்டை யும் மதிப்பதற்கு கொள்கை அல்லது கட்சிச் சார்பு என்றுமே தடையாக அமையப்படாது என்பதே அக் குழுவிலிருந்த மூவருடைய ஒருமித்த கருத்து. உங்கள் பணி செம்மையாகவும் திறமையாகவும் கிறை வேறும் என்பதற்கு உங்கள் ஆர்வமும் அணுகு முறையுமே சான்ருக உள்ளன. வாழ்க! - அன்பன் கம்பன் அடிப்பொடி சென்னைக்கு வந்து படத்துறை முயற்சிகளை மேற்கொண் டது தவறு என்று 1964 ஆம் ஆண்டு துவக்கத்தில் பாவேந் தர் உணர்ந்திருக்க வேண்டும். அவ்வாறு படத்துறைக்கு வந்தும் பாரதியின் வாழ்க்கையைத் திரைப்படமாக்காமல் இவ்வளவு நாள் தம் முயற்கியையும், உழைப்பையும், காலத்தையும் பாழடித்துவிட்டோமே என்று வருந்தி யிருக்க வேண்டும். வயது முதிர்ச்சியும் தள்ளாமையும் அவரை அச்சுறுத்தவே, விரைவில் பாரதியின் வரலாற்றை எழுதி அதைத் திரைப்படமாக்கிவிட வேண்டும் என்று எண்ணியிருப்பார். இந்த அவசரத் தூண்டுதல் அவரைக் கடுமையான உழைப்பில் தள்ளியது. இரவு பகலாக விழித்