பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில கவிதைகளின் தோற்றம் கவிஞர்கள் தாம் எழுதும் கவிதைகளைத் தாமே சிந்தித்து கற்பனையாகவும் எழுதுவர். தமது வாழ்க்கையிலும், தம். மைச் சார்ந்தோர் வாழ்க்கையிலும் ஏற்படும் எதிர்பாராத, சில நிகழ்ச்சிகளின் உந்துதல்களாலும் உணர்ச்சி வசப் பட்டு எழுதுவர். இத்தகைய உந்துதல்கள் எல்லாக் கவி ஞர்களின் வாழ்க்கையிலும் உண்டு. அரசியலிலும், சமு தாய மறுமலர்ச்சி இயக்கத்திலும், ஆசிரியர் பணியிலும் ஈடுபட்டிருந்த பாவேந்தர் உணர்ச்சி வசப்பட்டு ஆவேசம் கொள்வதற்கு அவர் வாழ்க்கையில் எத்தனையோ வாய்ப் புகள் இருந்திருக்கும். பிறர்மீது கொண்ட அன்பினுலும், உள்ள நெகிழ்ச்சியாலும் எத்தனையோ கவிதைகள் தோன்