பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் கினேவுகள்/42 சொன்ன பொருள்தான் சரி. நீ இதைப் போய்ப் பத்திரி கையிலெல்லாம் எழுதி என் பிழைப்பைக் கெடுத்திடாதே" என்று கூறி மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச் சிக்குப் பிறகு நிரவியில் பொடிப் பையன்' என்ற பெயர் மறைந்து எனக்கு மதிப்புயர்ந்தது. பின்னர் பிரெஞ்சுத் தமிழகத்தில் தமிழில் ஏதாவது ஐயமென்ருல் என்னிடம் தான் வருவார்கள். என்னைக் கலக்காமல் எந்தத் தமிழ் சம் பந்தப்பட்ட நிகழ்ச்சியும் நடைபெருது.' கவிஞர் நிரவி வாழ்க்கையைப் பற்றிக் கூறி முடித்த போது இரவு ஒன்பது மணி. கவிஞர் திரைப்படம் பார்க் கப் போகலாமென்று கூப்பிட்டார். அருகிலிருந்த ராஜ குமாரியில் ‘Scream of fear என்ற ஆங்கிலப் படம் பார்த் துத் திரும்பினுேம். [...] 7–2–62 ւ եճճr [] இன்று கல்லூரி விடுதியிலேயே இரவுச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு 9 மணியளவில் கவிஞருடைய இல்லம் வந்தேன். கவிஞரும் சாப்பாட்டை முடித்துக்கொண்டு கட்டிலில் சாய்ந்து கொண்டிருந்தார். நான் எதிரில் அமர்ந்து எழுதுவதற்காகப் பேளுவை எடுத்தேன். "'என்ன எழுதப் போறியா?’ என்று கேட்டார். 'ஆமாங்க. உங்க திருமணத்தைப் பற்றிச் சொல்லுங்க” என்றேன்.