பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுசுக்தாழ்!57 போது 'இருந்தால் என்ன? குற்றியலுகரம் புணர்ந்தால் தானே கெடும்? நான் பிரித்துத்தானே எழுதியிருக் கிறேன்" என்று சிரித்துக்கொண்டே சொன்ஞர். என்னுடைய பாடல்களில் இருந்த இவ்விரு பிழைகளையும் கோடிட்டுக் காண்பித்துப் பள்ளி மாணவனுக்குப் பாடம் தடத்துவதுபோல் அவ்வளவு எளிமையாக இலக்கணப் பாடம் நடத்தினர். குற்றியலுகரத்தின் வகைகளையும், புணர்ச்சி விதியையும் எழுதிக்காட்டிப் பொறுமையோடு விளக்கினர். - என் + தன் - என்றன் உன் + தன் - உன்றன் எம் + தம் - எந்தம் உம் - தம் - உத்தம் 'எந்தன் உந்தன்' என்ற சொற்களே தமிழில் இல்லை. இவையெல்லாம் தெரியாமல் கவிதை எழுத வரக்கூடாது என்று கடுமையாகவே சொன்னர். இவ்விலக்கணப் பாடம் அவர் நடத்தியபோது கவிஞர் பொன்னடியும் என் அருகிலிருந்தார்.

  • எந்தன் உந்தன்' இலக்கண விவகாரத்தில் பாவேந்தர் எப்போதுமே கடுமையாக இருந்திருக்கிருர் என்ற செய்தி அவர் நடத்திய 31-3-59 குயில் ஏட்டில் தலையங்கமாகவே வெளியாகியுள்ளது. அது வருமாறு:

குயில் புதுச்சேரி, தி. வ. ஆண்டு க கூ க 0 பங்குனி க.அ கவிஞர் நினைவிற்கு! 'எந்தன்' 'உந்தன்' எனத் தமிழில் சொற்களேயில்லை இதை முன் ஒருமுறை விளக்கியுள்ளோம். இவ்வா.

  • பாவேந்தர் கடத்திய இலக்கணப்பாடம்-அவர் கையெழுத்துப்படிபிற்சேல்க்கையில் உள்ளது. காண்க.