பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் நினைவுகள்/68 [T] 5–4—62 திங்கள் [] இன்று பாவேந்தருடைய திரைப்படத் துறை வாழ்க் கையைப் பற்றிக் கேட்டேன். அவர் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் திரைப்படங்களுக்குக் கதை, வ ச ன ம் எழுதிக் கொண்டிருந்தபோது நடந்த ஒருசில நிகழ்ச்சி களை நினைவு கூர்ந்து சொன்னர். அந்நிகழ்ச்சிகளை அவர் கூற்றிலேயே கொடுத்திருக்கிறேன்: நான் 1947 ஆம் ஆண்டு முதல் 1953 ஆம் ஆண்டு வரை மாடர்ன் தியேட்டர்ஸில் சில திரைப்படங்களுக்குக் கதை, வசனம் எழுதிக் கொண்டிருந்தேன். சுபத்ரா, சுலோசளுர் போன்ற புராணப்படங்களுக்கு முதலில் கதை வசனம் எழுத மறுத்தேன். பிறகு இராவணன், இந்திரசித்து போன்ற திராவிட வீரர்களின் வீரத்தைப் புலப்படுத்த வேண்டுமென்பதற்காகவே அவற்றுக்கு எழுத ஒத்துக் கொண்டேன். மாடர்ன் தியேட்டர்ஸ் உரிமையாளர் திரு. டி.ஆர். சுந்தரம் மிகவும் கண்டிப்பானவர்; சிறந்த திறமை சாலி, பணத்திலும் கருரானவர். எவ்வளவு பெரிய நடிக ரும், எழுத்தாளரும், அவர் எதிரில் உட்கார்ந்து பேசி நான் பார்த்ததில்லை. என்னைத் தவிர வேறு எவரையும் அவர் ‘அண்ணு' என்று கூப்பிட்டு நான் கேட்டதில்லை. அவரிடம் சவுக்கடிபட்ட பிரபல நடிகர்களுண்டு. அவர் எதிரில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நடைமுறை வேலைகள் இயந்திரம் போல் நடந்து கொண்டிருக்கும். fsuswr. சுலோசன இரண்டிற்கும் பாவேந்தரே கதைவசனம் எழுதி னர். ஆனல் ஜலகண்டாபுரம் ப.கண்ணன் பெயர் போட்டு அவை வெளியிடப்பட்டன. -