பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுசுந்தரம்171 உள்ளே இருந்த டி.ஆர்.எஸ். வெளியிலே வந்தார். நான் அடித்து முடிக்கும் வரையில் எதுவும் பேசாமல் அப்படியே நின்று பார்த்துக் கொண்டிருந்தார். ஏன்? என்று என்னை எதுவும் கேட்கவில்லை. நான் என் அறைக்குத் திரும்பியதும் டி. ஆர்.எஸ். ஓர் ஆளை அனுப்பி, வாயிற்காவலனை அடித்ததற்குக் கார ணம் கேட்டிருந்தார். நான் நடந்தவற்றை யெல்லாம் விரிவாக அந்த ஆளிடம் சொல்லி, முன்பணத்தில் ரூ 100எடுத்துக் கொண்டு மேலாளர் முதலில்எழுதி வைத்திருந்த குறிப்பையும் கொடுத்தனுப்பினேன். அடுத்த நாளே அந்த மேலாளர் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர். ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்ருன வளைய்ாபதியை மாடர்ன் தியேட்டர்ஸார் படமாக எடுக்க முடிவு செய் தார்கள். நான் அதற்குக் கதை வசனம் எழுதினேன். அப் படத்தை டி. ஆர். எஸ். டைரக்ட் செய்யவில்லை. டைரக் டர் ரகுநாத் இயக்கினர். டி. ஆர்.சுந்தரத்துக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்த காரணத்தால் அவர் ஒய் வெடுத்துக் கொள்ள கே.எல். வி. வசந்தாவோடு ஃபிஜித் தீவு சென்றிருந்தார் டைரக்டர் ரகுநாத் வளையாபதியில் நான் எழுதிய திரைக்கதை வசனத்தின் சில பகுதிகளை என்னைக் கேட்காமல் திருத்தியும், வெட்டியும் எறிந்து விட் டார். இதைக் கேட்டதும் எனக்கு அடக்க முடியாத சினம் மூண்டது. டி.ஆர்.எஸ். ஃபிஜியிலிருந்து திரும்பி வந்து விட்டார், வளையாபதிக்குப் பின் ஒப்பந்தம் செய்யப்பட்ட படமொன் றுக்குச் சில காட்சிகள் வசனம் எழுதியிருந்தேன். மொத் தம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்துக்கு நான்கு படங் கள் கதை வசனம் எழுத ரூ 40, 000/-க்கு ஒப்பந்தம் செய் யப்பட்டிருந்தேன். அந்த ஒப்பந்தங்களை 'கேன்சல் செய் யும்படி டி.ஆர்.சுந்தரத்துக்குக்கடிதம் எழுதினேன். அடுத்த படத்துக்காக நான் வசனம் எழுதியிருந்த சில காட்சி